»   »  ஷாப்பிங் மாலில் ஹன்சிகாவை மொய்த்த ரசிகர்கள்!

ஷாப்பிங் மாலில் ஹன்சிகாவை மொய்த்த ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகைகளை எங்கு பார்த்தாலும் சுற்றி வளைத்து தங்கள் அன்பை கொஞ்சம் ஓவராகவே காட்டுவது தமிழ் ரசிகர்கள் வழக்கம்.

இதற்கு முன் சினேகா, குஷ்பு, ஜோதிகா, சிம்ரன், நமீதா என பலரும் ரசிகர்களின் கைகளில் கசங்கியிருக்கிறார்கள்.

குறிப்பாக ஜோதிகாவும் குஷ்புவும் மறக்கமுடியாத அளவுக்கு எக்குத்தப்பாக எல்லை மீறியவர்கள்தான் தமிழ் ரசிகர்கள்.

லேட்டஸ்டாக ரசிகர்களிடம் சிக்கியவர் அடுத்த குஷ்பு என்று வர்ணிக்கப்படும் கொழுக் மொழுக் ஹன்ஸிகா மோத்வானி.

சமீபத்தில் வேட்டை மன்னன் படப்பிடிப்பு இடைவேளையில் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் ஷாப்பிங் பண்ண வந்த அவரைப் பார்த்ததும் மொய்த்துக் கொண்டனர் ரசிகர்கள். ஆளாளுக்கு அவர் மேல் கைவைத்து கிள்ள ஆரம்பித்தனர். இதனால் பதட்டமடைந்த அவரைக் காவலர்கள் வந்து காப்பாற்றினர்.

அப்படியும் ரசிகர்கள் விட்டபாடில்லை. இதில் அந்த கடையின் கண்ணாடி தடுப்புகள் உடைந்தன.

பின்னர் பத்திரமாக ஹன்ஸிகாவைக் காப்பாற்றி காரில் ஏற்றி அனுப்பினர்.

English summary
Hansika Motwani was mobbed at Express Avenue when she was gone for shopping. The fans gathered around an accessory store where she was shopping and tried to break the glass panes.
Please Wait while comments are loading...