»   »  அபிநய குத்து

அபிநய குத்து

Subscribe to Oneindia Tamil

தெலுங்கில் திவ்யமாக குத்தாட்டம் ஆடி வரும் அபிநயஸ்ரீ, தடபுடலான ஒரு குத்துப் பாட்டுடன் தமிழுக்குத் திரும்பி வருகிறார்.

அந்தக்காலத்தில் அமர்க்களமாக ஆட்டம் போட்ட அனுராதாவின் அருந்தவப் புதல்விதான் அபிநயஸ்ரீ. தன்னைப் போல இல்லாமல் தனது மகள் ஹீரோயினாக கலக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அபியை ஹீரோயினாக்க முயற்சித்தார் அனுராதா.

ஆனால் அது நடக்கவில்லை. பிரண்ட்ஸ் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தார். அதன் பிறகும் தனி நாயகியாக ஆவர்த்தனம் செய்யும் வாய்ப்பு அபிக்கு கிடைக்கவில்லை. இதனால் கிளாமர் ரோல்களிலும், பிறகு குத்தாட்டத்திலும் குதித்தார் அபி.

குத்தாட்டத்தில் கொஞ்ச நாள் கலக்கினார் அபி. ஆனால் மும்பையிலிருந்து கிளம்பி வந்த ரகஸ்யாக்களும், முமைத்கான்களும் ஒட்டுமொத்தமாக அபியின் மார்க்கெட்டை அமுக்கி விட்டனர்.

இதனால் தமிழில் தற்போது பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத அபிக்கு, தெலுங்கு கை கொடுத்து, பலத்த கரகோஷத்துடன் வரவேற்றது. தெலுங்கில் கிளாமர் ஆட்டத்திலும், சிறு சிறு ரோல்களிலும் பிசியாக நடித்து வருகிறார் அபி.

இந்த நிலையில் அவருக்கு நடிகை படத்தில் பாபுகணேஷ் ஒரு வாய்ப்பு கொடுத்தார். இதிலும் கிளாமர் ரோல்தான். இதையடுத்து இப்போது பச்சை நிறமே படத்தில் சரியான குத்துப் பாட்டுக்கு அபியைக் கூப்பிட்டுள்ளனராம்.

இந்தப் பாட்டில் ஒரு விசேஷம் இருக்கிறதாம். இதுவரை அபி ஆடியுள்ள பாடல்களிலேயே இதுதான் படு கிளாமரான, இளமை அணல் பறக்க படமாக்கப்படவுள்ளதாம்.

இந்தப் பாட்டின் மூலம் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத குத்தாட்ட நாயகியாக மாற வேண்டும் என்ற வேகத்துடன் உள்ள அபியும், கூடுதல் கிளாமர் காட்ட மறுப்பு சொல்லாமல் ஓ.கே. சொல்லியுள்ளாராம்.

வெரி குட் (குத்து)!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil