For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பேசியதைவிட 2 மடங்கு சம்பளம் கொடுத்து உதவினார் ராகவா லாரன்ஸ்.. சம்பத்ராம் உருக்கம்!

  |

  சென்னை : காஞ்சனா 3 படப்பிடிப்பின் போது ராகவா லாரன்ஸ் தனக்கு செய்த உதவியை நடிகர் சம்பத்ராம் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.

  Pandian stores Kathir Huge help | Raghava Lawrence emotional Tweet

  மும்பையில் பிரபுசாலமன் சார் இயக்கிய தமிழ் படமான காடன் தெலுங்கு மேக்கிங் செய்யும் பொழுது, சண்டைக் காட்சியில் நான் காயமடைந்தேன் என்று சிலருக்குத் தெரியும் பலருக்கு தெரியாது, அன்றிலிருந்து என்னால் சரியாக சுவாசிக்க முடியவில்லை, ஆனால் எப்படியோ எனது படப்பிடிப்பை முடித்து விட்டேன்.

  ஹீரோயின்ஸ் பணக்கார பசங்க.. இல்லன்னா சுகர் டாடியதான் கல்யாணம் பண்ணுவாங்க.. சீண்டும் ஸ்ரீரெட்டி!ஹீரோயின்ஸ் பணக்கார பசங்க.. இல்லன்னா சுகர் டாடியதான் கல்யாணம் பண்ணுவாங்க.. சீண்டும் ஸ்ரீரெட்டி!

   Actor Sampathram shared many information about Raghava Lawrence.

  ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தேன் காஞ்சனா 3படப்பிடிப்புக்குச் செல்லத் தயாரானபோது மீண்டும் கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது, அதே சமயம் காஞ்சனா படத்திற்கு நான் கொடுத்த டேட்ஸ் , அதே தேதியில் அனைவரும் ஷூட்டிங் செய்ய காத்துக்கொண்டு இருந்த நிலையில் என் உடலும் உள்ளமும் மிகவும் வேதனையில் இருந்த தருணம்.

  பின்னர் உடனடியாக நான் விஜயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். நான் ஒரு மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர் சொன்னார், உடனடியாக ஐ.சி. யு வில் அனுமதிக்கும்படி எனக்கு அறிவுறுத்தினார்.

  ஆனால் நான் இன்று மாலை வரை உயிர்வாழ சில மாத்திரைகளை தருமாறு மருத்துவரிடம் கேட்டுக்கொண்டேன், இதனால் நான் காஞ்சனா 3 படப்பிடிப்பில் கலந்துகொள்வேன், பின்னர் ஷூட்டிங் முடிந்தவுடன் மருத்துவமனை வந்து விடுகிறேன் என்று சொன்னேன், ஆனால் அவர் எனக்கு மாத்திரைகள் கொடுக்க மறுத்து, உடனடியாக அனுமதிக்கும்படி என்னை வற்புறுத்தினார். என் குடும்ப உறுப்பினர்கள் என்ன செய்வது என்று விவாதித்தனர்.

  நேரம் கடந்து கொண்டிருந்தபோது, ​​காஞ்சனா 3 மேலாளர் பாலமுருகன் சார் என்னை விஜயா மருத்துவமனையில் சந்திக்க வந்து என்னிடம் கேட்டார், வேறு சில நாட்களில் படப்பிடிப்பு நடத்தலாமா என்று ?

  தர்ம சங்கடமான நிலை பல பேர் கூடி , பல லட்சங்கள் முதலீட்டில் நடக்கும் தொழில். நான் சொன்னேன் நான் கண்டிப்பாக படப்பிடிப்புக்கு வருவேன் என்று (ஏனெனில் அது காஞ்சனா3 படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு ) மற்றும் நான் அதே சுவாச பிரச்சனையுடன் படப்பிடிப்பு இடத்திற்கு சென்றேன்.

  அவசர காலங்களில் எனது பாதுகாப்பிற்காக ராகவா லாரன்ஸ் அவர்களின் வற்புறுத்தலின்படி ஆம்புலன்ஸ் ஒன்று படப்பிடிப்பு இடத்தில் வைக்கப்பட்டதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன் (அவசரகாலத்திற்காக எனது 21 ஆண்டு திரைப்பட கேரியரில் எந்தவொரு தமிழ் பட படப்பிடிப்பு இடத்திலும் ஆம்புலன்ஸ் வைக்கப்பட்டிருப்பதை நான் பார்த்ததில்லை) குறிப்பாக என்னை போன்ற குண சித்திர வேடங்கள் செய்யும் ஒரு நடிகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கிடைக்குமா என்பது ஆச்சிரியமான உண்மை.

  ராகவா லாரன்ஸ் அவர்கள் என் நிலை கண்டு அதிர்ச்சியடைந்து என்னிடம் சம்பத்ராம் என்ன ஆனது என்று கேட்டார். ஆனால் நான் கடுமையான சுவாச பிரச்சனையால் அவதிப்பட்டதால் என்னால் சரியாக பேசி பதில் கூட சொல்ல முடியவில்லை. என் நிலையை புரிந்துகொண்டு அவர் சொன்ன வார்த்தை - "கவலைப்பட வேண்டாம் , உங்கள் ஷூட்டிங் பகுதியை 2 மணி நேரத்தில் முடித்துவிட்டு உங்களை விரைவாக அனுப்புவேன் என்று தன்னம்பிக்கை ஊட்டினார்.

  2 மணி நேரத்தில் அவர் என் பகுதியை முடித்தார், மேலாளர் வந்து என் சம்பள காசோலையை என் உதவியாளருடன் ஒரு கவரில் கொடுத்தார் நான் காரில் விஜயா மருத்துவமனைக்கு பயணத்தைத் தொடங்கினேன், வழியில் என் உதவியாளர் எனது சம்பள காசோலையைத் திறந்து காட்டினார் . அதில் என் சம்பளத்தின் இருமடங்கு இருந்ததை பார்த்து திகைத்து போனேன். வார்த்தைகள் முட்டின நெகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தினேன்

  அதுவே அவரது இயல்பு , லாரன்ஸின் சுபாவம். மிகவும் கனிவான இதயம் . உதவுதல் என்ற எண்ணம் அவருக்கு எப்படி வரும் எப்போ வரும் என்றெல்லாம் கணிக்க முடியாது. ஆனால் தக்க சமயத்தில் உதவ வேண்டிய நேரத்தில் சரியாக செய்வார்.

  பின்னர் நான் 7 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நல்ல நிலையில் திரும்பி வந்தேன். இப்போது நான் இயல்பானவன், வழக்கம் போல் பல படங்களில் நடித்து வருகிறேன். கடவுள் பெரியவர் நல்ல மனிதர்களை சந்திக்கும் பாக்கியங்களை ஏற்படுத்து கொடுக்கிறார்.

  லாரன்ஸ் போன்றவர்கள் பற்றி நிறைய நல்ல கருத்துக்கள் வரும். அதே சமயம் அவருக்கு எதிர் மறை கருத்துக்களும் வரும். அவை அனைத்தையும் கடந்து கொண்டு சாதிக்கும் நல்ல எண்ணம் படைத்தவராக அவர் மேலும் மேலும் பல உதவிகள் செய்ய வேண்டும் பலருக்கு என்பது என் கருத்து .

   Actor Sampathram shared many information about Raghava Lawrence.

  அவரை பற்றி நான் எழுதிய அத்தனையும் உண்மையே , உண்மை தவற வேறு எதுவும் இல்லை. எந்த விதமான மிகை படுத்தலும் இல்லை. எனக்கு நடந்த உண்மை சம்பவத்தை பதிவு செய்கிறேன்.

  எப்போதெல்லாம் காஞ்சனா படம் டிவி யில் ஒளிபரப்பாகின்றதோ அப்போதெல்லாம் எனக்கு கண்ணீர் வரும். அந்த கண்ணீரின் அழுத்தம் என் குடும்பத்திற்கு மட்டும் தான் நன்கு புரியும் என்று நடிகர் உருக்கமாக சம்பத்ராம் தெரிவித்துள்ளார்.

  English summary
  Actor Sampathram shared many information about Raghava Lawrence.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X