அடங்க மறுக்கும் த்ரிஷா... அடுத்து என்ன செய்ய போகிறார் மணிரத்னம்
சென்னை : கல்கி கிருஷ்ணமூர்த்தி 5 பாகங்களாக எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக சினிமா எடுக்க பல டைரக்டர்கள் பல காலமாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. தற்போது மணிரத்னம் அந்த முயற்சியில் இறங்கி உள்ளார்.
ஒரே சமயத்தில் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வரும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் எடுக்கப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்ட இந்த படத்தின் ஷுட்டிங், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகி வந்தது. தற்போது மீண்டும் துவங்கப்பட்ட ஷுட்டிங், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் திறமையான நடிகர், நடிகைகள் பலர் நடித்து வருகின்றனர். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, லால், ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரியாஸ் கான், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்
சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் முதல் போஸ்டர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து படத்தின் பாடல்கள் லிஸ்ட், நடிகர்களின் கேரக்டர்கள் என அடுத்தடுத்து பட்டியல்கள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. இந்த படத்தின் முதல் பாகம் 2022 ம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்பட உள்ளதாம். இரண்டாம் பாகம் 2022 ம் ஆண்டின் இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம்.

போஷன் முடிந்தது
ஜெயம் ரவியும், விக்ரமும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் தங்களின் போஷனை முடித்து விட்டதாக சோஷியல் மீடியாவில் அறிவித்தனர். அதிலும் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் கேரக்டரிலும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் கேரக்டரிலும், கார்த்தி வந்தியத்தேவன் கேரக்டரிலும் நடிப்பது உறுதியாகி உள்ளது.

லீக்கான ஐஸ்வர்யா ராய் ஃபோட்டோ
இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராயின் ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள் வெளியாகி, வைரலாகின. இதில் சிவப்பு நிற பட்டுப்புடவையில், ராணி கெட்அப்பில் ஐஸ்வர்யா ராய் இருப்பது போன்று இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர், இதைத் தடுக்க முயற்சிகள் செய்து வருகின்றனர்.

எச்சரித்த மணிரத்னம்
இச்சம்பவத்திற்கு பிறகு, ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மணிரத்னம் எச்சரித்தார். அதற்கு பிறகு படக்குழுவில் உள்ளவர்கள், ஷுட்டிங் ஃபோட்டோஸ் லீக்காகி விடாமல் மிக கவனமாக இருந்து வருகின்றனர்.

அடங்காத த்ரிஷா
இந்நிலையில் த்ரிஷா, மீண்டும் ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங் தற்போது மகேஷ்வர் நகரில் மிக அழகாக இயற்கை எழில் சூழப்பட்டு, நர்மதை நதி பாயும் கரையில் அமைந்துள்ள 250 ஆண்டுகள் பழமையான அகில்யா கோர்ட்டையில் நடைபெற்று வருகிறது.

அரண்மனை ஃபோட்டோ
இந்த கோட்டையில் மிக உயரமான இடத்தில் அமர்ந்து எடுத்த ஃபோட்டோக்களை தான் த்ரிஷா பகிர்ந்துள்ளார். இதற்கு முன்பும் மத்திய பிரதேசத்தில் குவாலியரில் பிரம்மாண்ட அரண்மனையில் ஷுட்டிங் நடந்த போது, அந்த அரண்மனையின் ஃபோட்டோக்களையும் த்ரிஷா பகிர்ந்திருந்தார். ஆனால் தற்போது மணிரத்னம் கண்டிப்பாக கூறிய பிறகும் த்ரிஷா ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ளது படக்குழுவினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

உஷாரான வில்லன் நடிகர்
இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் 90 களின் பிரபல வில்லன் பாபு ஆன்டனியும் விக்ரமுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். ஆனால் அதோடு, இது ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டதும் இல்லை. நாங்கள் காஸ்ட்யூமிலும் இல்லை. விக்ரம் யதார்த்தமாக எனது அறைக்கு வந்த போது எடுக்கப்பட்ட ஃபோட்டோ இது என கருத்து பதிவிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











