»   »  இத்துப்போன உடையில் தெருத் தெருவா அப்பளம் விற்ற பிரபல நடிகர்: ரசிகர்கள் அதிர்ச்சி

இத்துப்போன உடையில் தெருத் தெருவா அப்பளம் விற்ற பிரபல நடிகர்: ரசிகர்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
தெருத் தெருவா அப்பளம் விற்ற பிரபல நடிகர்!

மும்பை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தெருத் தெருவாக அப்பளம் விற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

விகாஸ் பெஹலின் சூப்பர் 30 படத்தில் நடித்து வருகிறார் ரித்திக் ரோஷன். பிரபல கணித மேதை ஆனந்த் குமாராக நடிக்கிறார் ரித்திக். இந்த படத்திற்காக அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்துள்ளார்.

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்து வருகிறது.

ஜெய்பூர்

ஜெய்பூர்

ஜெய்பூரில் இத்துப் போன உடை அணிந்து சைக்கிளில் தெருத் தெருவாக அப்பளம் விற்றுள்ளார் ரித்திக். படத்திற்காக அவர் அப்பளம் விற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஸ்டைல் அன்ட் ஹேன்டசமாக இருக்கும் ரித்திக் ரோஷனா இப்படி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார் என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

ரித்திக் சூப்பர் 30 படத்திற்காக ஆனந்த் குமாரை சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு அவர் தனது உடல் எடையை குறைத்துள்ளார். ரித்திக்கின் மாற்றத்தை பார்த்து ஆனந்த் குமாரே வியப்பில் உள்ளார்.

மாணவர்கள்

மாணவர்கள்

ஏழை குடும்பங்களில் பிறந்து என்ஜினியரிங் படிக்க விரும்பும் 30 பேரை தேர்வு செய்து இலவச பயிற்சி அளிக்கிறார் ஆனந்த். ஆண்டுதோறும் 30 பேருக்கு பயிற்சி அளிக்கிறார்.

பெரிய ஆட்கள்

பெரிய ஆட்கள்

ஆனந்த் குமாரிடம் இதுவரை பயிற்சி பெற்ற 450 பேர் பலர் பெரிய கல்வி நிறுவனங்களில் படித்துள்ளனர். அதில் 396 பேர் ஐஐடிகளில் படித்துள்ளனர்.
சூப்பர் 30 படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் ஜோடியாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மிருனாள் தாகூர் நடித்து வருகிறார்.

English summary
Super 30 is based on the life story of mathematician Anand Kumar of 'Super 30' fame. The shooting schedule of Super 30 had kicked off at Benares and now the team is busy filming in Jaipur. We came across some more inside pictures from the sets which will leave you quite surprised.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil