»   »  ஆசினுக்காக காத்திருப்பு!

ஆசினுக்காக காத்திருப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் வேல் படத்தின் நாயகி ஆசினுக்காக படயூனிட்டே தவம் கிடைக்காத குறையாக காத்துக் கிடக்கிறதாம்.

சூர்யா-ஆசின் ஜோடியாக நடிக்கும் வேல் படம் ஹரி இயக்கத்தில் வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சூர்யாவின் காட்சிகள் எல்லாம் எடுத்து விட்டாராம் டைரக்டர் ஹரி. ஆனால் ஆசின்-சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்தால் படம் வேகமாக முடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறாராம்.

அவரிடம் ஏன் சார் அசினுக்காக காத்து கிடக்கீங்க, வேற கதாநாயகியை போட்டு, சட்டு புட்டுன்னு படத்தை எடுப்பீங்களா என்று கேட்டதற்கு, ஹரிக்கு வந்ததே கோபம், கொந்தளித்து விட்டார்.

நான் ஆசினிடம் வேல் படத்திற்காக கால்ஷீட் கேட்டபோது இந்தியில் எடுக்கப்படும் கஜினி படப்பிடிப்பில் பயங்கர பிசியாக இருந்தார். நானும், சரி இந்தப்படம் ஷூட்டிங் இல்லாத நேரம் எங்கள் படத்தில் நடித்துக் கொடுங்கள் என்றேன். அவரும் சரி சார், ஆனால் நான் வர முன்ன பின்ன லேட்டாகும். அப்புறம் என்னாலதான் படம் லேட்டுன்னு பேர் ரிப்பேராகி விடக்கூடாது என்றார் ஆசின்.

இந்தியி்ல் எடுக்கப்படும் கஜினியில் பாலிவுட்டின் பெரிய நடிகர் ஆமிர்கானே ஆசின் தான் வேணும்னு ஒத்தை காலில் நிற்கிறார். அவ்வளவு பெரிய நடிகரே ஆசினை நடிக்க அழைக்கும் போது, நாங்கள் அவருக்காக காத்திருப்பதில் ஒன்றும் தப்பே கிடையாது என்று ஒரு போடு போட்டார் ஹரி.

வேல் படத்தில் நாயகிக்குரிய ரோலில் ஆசின் நடித்தால் தான் மிகச் சரியாக இருக்குமாம். அந்த கதாபாத்திரம் அவருக்காகவே தயார் செய்யப்பட்டதாம்.

அதெல்லாம் சரி ஹரி சார்... நீங்க காத்திருங்க தப்பே கிடையாது.

தயாரிப்பாளர் காத்திருக்கணும்ல...

Read more about: asin surya hari

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil