»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

கடவுள் என்றால் வேப்பங்காயாக கசக்கிறது ரஜினிக்கு. ஆனால் அவரது வாழ்க்கையில் திடீரென்று ஒரு மாற்றம் ஏற்படுகிறது.

கடவுள் குறித்து பாசிட்டிவாக சிந்திக்கத் தொடங்குகிறார். அன்று முதல் அவரது வாழ்க்கையில் ஒளி வெள்ளம்தான். வெற்றியின் உச்சத்திற்கேபோகிறார்.

பாபா படத்தின் கதைக் கருதான் இது தானாம்.

பாபா படத்தின் கதை குறித்து ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சூட்டிங் நடக்கும் கேம்பகோலா மைதானத்தில் முக்கியடெக்னிஷியன் ஒருவர் நமக்கு சொன்ன விவரம் தான் இது.

சாதாரண தொழிலாளியாக இருக்கிறார் ரஜினி. அத்துடன் அடிதடி வேலைகளிலும் ஈடுபடுகிறார். இதனால் லோக்கல் தலைவராகிறார். கடவுள்நம்பிக்கை சுத்தமாக கிடையாது, கடவுள் இருந்தால் நேரில் வரச் சொல் பார்க்கலாம் என்று சில காட்சிகளில் விதண்டாவாதம் பேசுகிறார்.

இந் நிலையில் ஒரு மகானை சந்திக்க்க நேரிடுகிறது. அந்த மகான் ரஜினியிடம், இந்தப் பகுதியில் உள்ள காளி கோவில் விரைவில் புதுப்பிக்கப்படும்என்றார்.

அதைக் கேட்ட ரஜினி சிரிக்கிறார். பாழடைந்து போயுள்ள இந்தக் கோவிலை யார் புதுப்பிப்பார். இந்த ஏரியாவில் யாருமே இதைப் புதுப்பிக்க முன் வரமாட்டார்கள். அப்படி இருக்கையில் எப்படி இது புதுப்பிக்கப்படும் என்று ஏளனமாக கேட்கிறார்.

அது விதி, கட்டாயம் நடக்கும் என்று கூறி விட்டு மகான் வந்த வழியிலேயே திரும்பிச் செல்கிறார். ரஜினிக்கு குழப்பம்.

இந்த நேரத்தில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு மகாராணி ஒருவர் இந்த காளி கோவிலுக்குச் செல்ல விரும்புகிறார். இதையடுத்து அமைச்சர்கள்,அதிகாரிகள் காளி கோவிலுக்குப் படையெடுக்கிறார்கள். கோவிலை சுத்தப்படுத்துகிறார்கள்.

ஆனார் ராணி வரவில்லை, அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டு விடுகிறது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ரஜினியின் மனதில், மகான் சொன்னது பொட்டில் அடித்தது மாதிரி நினைவுக்கு வருகிறது. நாத்திகம் பேசி வந்தரஜினிக்க ஆத்திக வழியில் சிந்திக்கத் தொடங்குகிறார். அது அவரது வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

இதன் பிறகுதான் ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் காட்சிகள் வருகிறதாம்.

இந்தக் காட்சிகள் எடுக்கப்பட்டபோது கூட இருந்தவர் நமக்குக் கதை சொன்ன பார்ட்டி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil