»   »  பைரவா ஷூட்டிங்... பூசணிக்காய் உடைத்து நிறைவு செய்த விஜய் & டீம்!

பைரவா ஷூட்டிங்... பூசணிக்காய் உடைத்து நிறைவு செய்த விஜய் & டீம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் நடித்துள்ள பைரவா படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்ததையொட்டி, பூசணிக்காய் உடைக்கப்பட்டது.

எங்க வீட்டுப் பிள்ளை, உழைப்பாளி, நம்மவர், தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்த பாரம்பரிய நிறுவனமான நாகி ரெட்டியின் விஜயா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.


Bairava shooting wrap up with traditional sign

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் பரதன்.


இந்தப் படத்தின் நேற்று பூசணிக்காய் உடைப்புடன் நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் விஜய் , தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி, இயக்குநர் பரதன், ஒளிப்பதிவாளர் சுகுமார், டிட்டர் பிரவீன், கலை இயக்குநர் பிரபாகரன் தலைமை நிர்வாகி ரவிச்சந்திரன், முதன்மை நிர்வாகி குமரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


Bairava shooting wrap up with traditional sign

கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமையா, சரத் லோகிதாஸ், சதிஷ், அபர்னா வினோத், சிஜு ரோசலின், பாப்ரி கோஷ், மைம் கோபி, ஸ்ரீமன் ஆகியோர் மிக முக்கியாமான பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


Bairava shooting wrap up with traditional sign

முதல் முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இளையதளபதி விஜய் படத்திற்கு இசை அமைத்துள்ளார் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதி இருக்கிறார்.


பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பித்துள்ளன.

English summary
Bairava shooting has been wrapped up with traditional pumpkin breaking.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil