»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புது அவதாரம் எடுத்துள்ளார் பானுப்பிரியா.

கண்களால் இளம் உள்ளங்களை கவர்ந்து இழுத்த பானுப்பிரியா திருமணத்திற்குப் பிறகு நடிப்பைக் கைவிட்டார். திருமண வாழ்க்கையில் கொஞ்சம் போல கசப்புதென்பட்டதும், ஏவி.எம். நிறுவனம் தயாரித்த வாழ்க்கை டிவி சீரியல் மூலம் மீண்டும் நடிப்பை கையில் எடுத்தார்.

வாழ்க்கை அவருக்கு புதிய வாழ்க்கையைக் கொடுத்தது. ஏவி.எம். நிறுவனத்திலேயே அவர் குடியிருந்தார். இந் நிலையில்வாழ்க்கை தொடர் முடிந்தவுடன் தனிப் பறவையானார். மீண்டும் படங்களில் நடிக்கத் தயார் என்று அறிவிக்கவும் செய்தார்.அதற்குப் பலனாக மனோ பாலாவின் புதிய படத்தில் பானுப்பிரியாவுக்கு அசத்தலான கேரக்டர் கிடைத்துள்ளது.

ஹீரோயினாக, குணச்சித்திர ரோல்களில் அருமையாக நடித்தவரான பானுப்பிரியா மனோபாலாவின் நைனா படத்தில்கொடூரமான வில்லியாக நடிக்கவுள்ளார். வித்தியாசமான கெட்டப்பில், அதி பயங்கர வில்லியாக வருகிறாரம் பானுப்பிரியா. இந்தரோலுக்காக முன்னணி நடிகைகள் சிலரை மனோ பாலா அணுகியபோது அவர்கள் மறுத்து விட்டனர். ஆனால் பானுப்பிரியா இந்தகேரக்டரை ஏற்றுக் கொண்டாராம்.

நைனாவில் ஜெயராம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் அப்பா ஜெயராமின் ஜோடியாக நடிக்கிறார் பானுப்பிரியா. கணவர்இறந்தபின் அவரது சாவுக்கு மகனே காரணம் என்று நினைக்கும் தாய், மகனை பழி வாங்க புறப்படுகிறார்.

இந்தப் படத்தில் 14 காமடி நடிகர்கள் நடித்துள்ளனர். அட்டகாசமான ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக இது இருக்கும்என்கிறார் மனோ பாலா. முக்கிய ரோலில் வைகைப் புயல் வடிவேலு வருகிறார். அவருக்கு போலிச் சாமியார் வேடமாம்.

அடடே, முக்கியமான சேதி மறந்து போச்சே, ஹீரோயின் யார் தெரியுமா? கேரளத்து குயில் மான்யாதான் ஜெயராக்கு ஜோடி.!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil