»   »  மலைப் பாம்பும், 'பிந்து' பேத்தியும்!

மலைப் பாம்பும், 'பிந்து' பேத்தியும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images

மதுரைப் பொண்ணு, சென்னைப் பையன் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகும் 'பெரும்' நடிகை பிந்துகோஷின் பேத்தி தேஜாமை, முதல் படத்திலேயே மலைக்க வைக்கும் அனுபவத்தை சந்தித்துள்ளார்.

ஒரு காலத்தில் காமெடி கலந்த கவர்ச்சியில் கலக்கியவர் பிந்துகோஷ். முன்னணி காமெடியன்கள் பலருடனும் இணைந்து நடித்தவர். குண்டு உடம்பை வைத்துக் கொண்டு கலக்கிய பிந்துகோஷ் இப்போது ரிட்டயர்ட் ஆகி விட்டார்.

இந்த நிலையில் இவரது பேத்தி நடிக்க வந்துள்ளார். ஆனால் பாட்டியைப் போல காமெடியில் கலக்காமல், நாயகியாக மாறியுள்ளார்.

மதுரைப் பொண்ணு, சென்னைப் பொண்ணு படத்தில்தான் பிந்துகோஷின் பேத்தியான தேஜாமை நாயகியாக அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே பயமுறுத்தலான அனுபவத்தை சந்தித்துள்ளார் தேஜாமை.

படத்தில் இடம் பெற்றுள்ள வேர் போல துணிந்தால் பாறையும் பிளக்கும், வீண் என்று பயந்தால் வாழ்வெங்கு கிடைக்கும் என்று தொடங்கும் அந்தப் பாடலை ஆந்திரா பக்கம் உள்ள வனப் பகுதியில் படம் பிடித்துள்ளனர்.

நாயகி தேஜா மை சோகத்தில் இருக்க, நாயகன் பங்கஜ்குமார் அவரை ஆறுதல்படுத்திப் பாடுவது போல காட்சி. பாடலில் வரும் வரிகளுக்குப் பொருத்தமாக வேர் ஊடுறுவி பிளந்த பாறை ஒன்றைக் கண்டுபிடித்து அங்கு நாயகியை படுக்க வைத்து படம் பிடித்தார்களாம்.

படுத்துக் கொண்டிருந்த தேஜா மைக்கு கைக்குப் பிடிப்பாக ஒன்றும் கிடைக்காததால், நழுவியபடி இருந்துள்ளார். இதையடுத்து அருகில் உள்ள வேரை இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள் என்று இயக்குநர் சொல்ல, அவரும் அருகில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பிடித்துக் கொண்டார்.

கொஞ்ச நேரத்தில் தேஜா மை பிடித்திருந்தது நழுவியுள்ளது. என்ன என்று திரும்பிப் பார்த்த தேஜா மை அலறி விட்டார். காரணம், அவர் பிடித்திருந்தது வேர் அல்ல, மாறாக சூப்பரான மலைப் பாம்பு.

கத்தியபடி கையை உதறிய அவர் மூர்ச்சையாகி விட்டாராம். தண்ணீர் தெளித்து ஆறுதல் கூறி அப்புறமாக வேறு இடத்தில் வைத்து ஷூட்டிங்கைத் தொடர்ந்தார்களாம்.

இந்தப் படத்தில் தேஜமை தவிர மதுரை பூஜா என்ற ஹீேராயினும் அறிமுகமாகிறார். இவருக்கும் தேஜமைக்கும் பயங்கர போட்டியாம். நடிப்பில் அல்ல, கிளாமர் காட்டுவதில் தான்.

அடடே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil