»   »  தொடர்ந்து 40 மணி நேரமாக சண்டை போடும் விஜய்..'தெறி'க்காக

தொடர்ந்து 40 மணி நேரமாக சண்டை போடும் விஜய்..'தெறி'க்காக

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெறி படத்திற்கான அதிரடி சண்டைக் காட்சி ஒன்றை தொடர்ந்து 40 மணி நேரங்களாக இயக்குநர் அட்லீ படம் பிடித்து வருகிறாராம்.

ராஜா ராணி படத்தின் மூலம் புகழ்பெற்ற அட்லீ தற்போது விஜய்யை வைத்து தெறி படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை டிசம்பருக்குள் முடித்து விட அட்லீ திட்டமிட்டு இருந்தார்.


ஆனால் எதிர்பாராதவிதமாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக சில வாரங்களுக்கு தமிழ்த் திரையுலகமே ஒட்டுமொத்தமாக முடங்கியது.


Continuous 40 hrs Shooting for Theri

மழையால் ஏற்பட்ட இந்த தாமதத்தை சரி செய்யும் நோக்கில் தற்போது தெறி படத்தின் சண்டைக் காட்சிகளை இரவுபகலாக எடுத்து வருகிறார் அட்லீ.


தற்போது தெறி படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் மேற்பார்வையில் அட்லீ எடுத்துக் கொண்டிருக்கிறார்.


Posted by George C. Williams on Monday, December 21, 2015

இதற்காக தொடர்ந்து 40 மணி நேரம் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் அட்லீ. இந்தத் தகவலை அட்லீ மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளார் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

English summary
Vijay's Theri now Forward to Climax. Theri Cinematographer George C. Williams Says "Continuous 40 hrs of shooting Theri work enjoying it".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil