twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படப்பிடிப்பில் தவறி விழுந்த இயக்குநர் சேரன்.. தலையில் பலத்த காயம்.. 8 தையல் போடப்பட்டுள்ளதாக தகவல்!

    |

    சென்னை: படப்பிடிப்பில் தவறி விழுந்த இயக்குநர் சேரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர் சேரன். இயக்குநர் கேஎஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக கேரியரை தொடங்கினார்.

     இரண்டே நாட்களில் 10 மில்லியன் பார்வையாளர்கள்... ராக்கெட் வேகத்தில் வைரலாகும் இரண்டே நாட்களில் 10 மில்லியன் பார்வையாளர்கள்... ராக்கெட் வேகத்தில் வைரலாகும்

    1997ஆம் ஆண்டு பாரதிகண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சேரன். தொடர்ந்து பொற்காலம், தேசியகீதம், வெற்றிக்கொடிக்கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோ கிராஃப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

    கடைசியாக திருமணம்

    கடைசியாக திருமணம்

    இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வலம் வருகிறார் சேரன். ஆட்டோகிராப், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, மாய கண்ணாடி, ஆடும் கூத்து. பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை, பொக்கிஷம், யுத்தம் செய், முரண், சென்னையில் ஒரு நாள், மூன்று பேர் மூன்று காதல், கதை திரைக்கதை வசனம் இயக்கம், கடைசியாக திருமணம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    ராஜாவுக்கு செக் படம்

    ராஜாவுக்கு செக் படம்

    கடைசியாக திருமணம் படத்தை இயக்கிய சேரன் அப்படத்தில் அறிவுடைநம்பி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தும் இருந்தார். அவரது நடிப்பிடில் கடைசியாக வெளியான படம் ராஜாவுக்கு செக். இந்த படத்தில் இர்ஃபான், சிருஷ்டி டாங்கே, சரய்யு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    பிக்பாஸ் சீசன் 3

    பிக்பாஸ் சீசன் 3

    இயக்குநர் சேரன் இதுவரை நான்கு தேசிய விருதுகள், 6 தமிழக அரசின் விருதுகள், 5 பிலிம்ஃபேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சேரன்.

    ரசிகர்களுக்கு அப்பாவான சேரன்

    ரசிகர்களுக்கு அப்பாவான சேரன்

    இதில் மக்கள் ஆதரவுடன் 77 நாட்கள் இருந்த சேரன், மக்களின் அன்பையும் மதிப்பையும் சம்பாதித்தார். இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளரான லாஸ்லியா, இயக்குநர் சேரனை சேரப்பா என்றழைத்ததால் ரசிகர்களும் அவரை அப்பா என்று அழைக்க தொடங்கிவிட்டனர்.

    ‘ஆனந்தம் விளையாடும் வீடு'

    ‘ஆனந்தம் விளையாடும் வீடு'

    இந்நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்துள்ளார் இயக்குநர் சேரன். இயக்குநர் சேரன், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கும் படம், 'ஆனந்தம் விளையாடும் வீடு'. இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்குகிறார்.

    ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர்

    ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர்

    ஶ்ரீ வாரி பிலிம் சார்பாக தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கும் இந்தப் படத்தில், கவுதம் கார்த்திக் ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடிககிறார். இவர், நடிகை ஜீவிதா- டாக்டர் ராஜசேகர் தம்பதியின் மகள் ஆவார். மேலும் சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, சினேகன், நமோ நாராயணன் உட்பட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

    கால் தடுமாறி கீழே விழுந்தார்

    கால் தடுமாறி கீழே விழுந்தார்

    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று படத்தில் முக்கியமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டின் கட்டுமானப் பணி படப்பிடிப்பு நடந்தபோது இயக்குநர் சேரன், கால் தடுமாறி மேலே இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    தலையில் எட்டு தையல்கள்

    தலையில் எட்டு தையல்கள்

    இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டுள்ளன. இருந்தும் படப்பிடிப்பை ரத்து செய்யாமல் தொடர்ந்து தனது காட்சிகளை சேரன் நடித்துக் கொடுத்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

    டிவிட்டரில் நலம் விசாரிப்பு

    டிவிட்டரில் நலம் விசாரிப்பு

    தற்போது 'ஆனந்தம் விளையாடும் வீடு' படப்பிடிப்பு முழுமையாக முடிந்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர். இயக்குநர் சேரன் காயமடைந்த தகவலை கேட்ட ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் நலம் விசாரித்து வருகின்றனர்.

    பயம் ஒன்றும் இல்லை..

    பயம் ஒன்றும் இல்லை..

    இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து இயக்குநர் சேரன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, நலம் விசாரிக்கும் நண்பர்களுக்கு வணக்கம்.. நலமாக இருக்கிறேன்.. பயம் ஒன்றும் இல்லை.. உங்களின் அன்பால், கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டேன் என்பதே சரி.. அனைவரும் அனைத்து வேலைகளிலும் கவனமாக இருக்கவும்.. நன்றி அனைவருக்கும்.. இவ்வாறு சேரன் குறிப்பிட்டுள்ளார்.

    தெளிவு படுத்தியமைக்கு நன்றி

    தெளிவு படுத்தியமைக்கு நன்றி

    இயக்குநர் சேரனின் பதிவை பார்த்த இந்த நெட்டிசன், சேரன் சார், நீங்கள் விரைவில் குணம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ( தலையில் 8 தையல்களாமே) நன்றாக ஓய்வு எடுங்கள். இந்த சூழ்நிலையிலும் பதிவு போட்டு தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி.. என குறிப்பிட்டுள்ளார்.

    சிந்தனைதான் பதற வைக்கிறது

    சிந்தனைதான் பதற வைக்கிறது

    மற்றொரு ரசிகரான இவர், படப்பிடிப்பு தளங்களில் குறைந்தபட்ச பாதுகாப்பு உபகரணங்கள் கூட இருக்காது. உள்ளரங்க படப்பிடிப்புகளில் தீயணைப்பான் இருக்காது. ஒரு முதலுதவி பெட்டிகூட இல்லாத Shooting spot நம்முடையது. என்ன நடந்திருக்குமோ என்ற சிந்தனைதான் பதற வைக்கிறது. விரைவில் நலம்பெறுங்கள் சார் என குறிப்பிட்டுள்ளார்.

    கவலையை போக்க எண்ணி இடுகை

    கவலையை போக்க எண்ணி இடுகை

    இயக்குநர் சேரனின் பதிவை பார்த்த இந்த நெட்டிசன், இப்போதுதான் தெரிந்து கொண்டேன் சார். இத்தனை இடர்களுக்கும் மத்தியில் எங்களது கவலையை போக்க எண்ணி இடுகை இட்டமைக்காக நன்றி சார். உங்கள் மீது எண்ணற்றோர் கொண்டுள்ள அன்பு உங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும். நலம் பெற விழைகிறேன் சார் என பதிவிட்டுள்ளார்.

    எப்போதும் நலமாக இருக்கனும்

    எப்போதும் நலமாக இருக்கனும்

    மற்றொரு ரசிகரான இவர், நீங்கள் நலமோடு இருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கின்றேன் நீங்கள் நலமா? உங்களுக்கு எதுவும் ஆகாது. நீங்கள் எப்போதும் நலமாக இருக்கனும். நீங்கள் எங்கள் எல்லோருக்கும் வேண்டும். இன்னும் நிறைய சாதி்க்கனும்.. என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் படைப்புகளை ரசிக்க

    உங்கள் படைப்புகளை ரசிக்க

    மற்றொரு ரசிகரான இவர், இடர்கள் பலவற்றை வென்றவர் நீங்கள். சிறு விபத்தாக இருந்தாலும் கவனம் அவசியம். உங்கள் படைப்புகளை ரசிக்க என்னை போல் பல லட்ச நபர்கள் உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Director Cheran injured in shooting spot. Director Cheran fell down from building while shooting got injured in head.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X