»   »  காஜல்-பரத்-பேரரசு

காஜல்-பரத்-பேரரசு

Subscribe to Oneindia Tamil


இயக்கம், ஓரிரு காட்சிகளில் தலையைக் காட்டுவது, பாட்டு எழுதுவது என கலக்கி வந்த இயக்குநர் பேரரசு தற்போது பாடகராகவும் அவதாரம் எடுத்து அசத்தியுள்ளார்.

திருப்பாச்சி மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் பேரரசு. அதிரடியான இரு படங்களை விஜய்க்குக் கொடுத்து கலக்கிய பேரரசு, அவர் நடித்த படங்களில் ஓரிரு காட்சிகளிலும் வந்து போனார்.

ஆனால் விஜய்யை வைத்து அவர் எடுத்த படங்களுக்குப் பிறு பேரரசு சிற்றரசு ஆகி விட்டார். அஜீத்தை வைத்து இயக்கிய திருப்பதி, விஜயகாந்த்தை வைத்து இயக்கிய தர்மபுரி ஆகியவை பெரும் தோல்விப் படங்களாகின.

இந்த நிலையில் தற்போது மீண்டும் புத்தெழுச்சியுடன் திரும்பி வந்துள்ள பேரரசு, காஜல்-பரத்தை வைத்து பழனியை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

வழக்கம் போல இந்தப் படத்திலும் பேரரசுவே அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். பேரரசு பாணி அதிரடி, ஆக்ஷன் படமான இந்தப் படம் இடையில் ஏற்பட்ட தடங்கலுக்குப் பிறகு படு வேகமாக வளர்ந்து வருகிறது.

காதலுடன் திரிந்த பரத் கையில் அரிவாளைக் கொடுத்து அதகளம் பண்ண வைத்திருக்கிறாராம் பேரரசு.

இப்படத்தின் மூலம் இன்னொரு அவதாரமும் எடுத்துள்ளார் பேரரசு. அதாவது, தான் எழுதிய ஒரு குத்துப் பாட்டுக்கு தானே குரல் கொடுத்து கலக்கியுள்ளாராம்.

லோக்கு லோக்கு லோக்கலு என்னை ஏத்துக்கடி ஏத்துக்கடி ஏஞ்சலு என்று ஆரம்பிக்கும் அந்தப் பாட்டுக்கு அம்சமாக குரல் கொடுத்துள்ள பேரரசு, இனிமேல் தான் இயக்கும் படங்களில் குறைந்தது ஒரு பாட்டையாவது பாட முடிவெடுத்துள்ளாராம்.

அஷ்டாவதானி டி.ராஜேந்தர் போல பேரரசுவும், ஒவ்வொரு துறையிலும் புகுந்த விளையாடப் போகிறாராம்.

எப்படியோ, பேரரசு கோலிவுட்டில் மறுபடியும் முடி சூடினால் சந்தோஷம்தான்!

Read more about: ajith, director, perarasu, sivakasi, tirupathi, vijay
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil