தொடர்ந்து தொல்லை கொடுத்த இயக்குநர்.. படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா இயக்குநர் ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் தன்னை திட்டியது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ஓப்பனாக பேசியுள்ளார்.

சமீபத்தில் டாப்லெஸ் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையத்தை தெறிக்க விட்டவர் நடிகை இஷா குப்தா.

வித்தியாசமாக யோகா செய்யும் புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிட்டு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வரும் இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

மிஸ் இந்தியா டைட்டில்

மிஸ் இந்தியா டைட்டில்

கடந்த 2007ம் ஆண்டு நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா டைட்டில் மற்றும் மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் என இரு டைட்டிலையும் வென்றவர் நடிகை இஷா குப்தா. பாலிவுட்டில் இம்ரான் ஹாஸ்மி, ரந்தீப் ஹூடா நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான ஜானத் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

அக்‌ஷய் குமாருடன்

அக்‌ஷய் குமாருடன்

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமாரின் தேசப்பற்று படமான ரஸ்டம் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் நடிகை இஷா குப்தா. தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். வெப்சீரிஸ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

அசத்தல் யோகா

அசத்தல் யோகா

வெறும் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு படு கிளாமராக யோகா செய்து அசத்துவதில், நடிகை இஷா குப்தாவுக்கு நிகர் யாரும் இல்லை என்றே சொல்லலாம். வில்லாக வளைந்து வித விதமான யோகாக்களை செய்து அசத்தி யோகா மாஸ்டராக உள்ளார் இஷா குப்தா.

வெறும் பேன்ட் மட்டும்

வெறும் பேன்ட் மட்டும்

மேலாடை ஏதும் அணியாமல் வெறும் பேன்ட் மட்டும் அணிந்து கொண்டு டாப்லெஸ் ஆக மொத்த முதுகையும் காட்டியபடி இஷா குப்தா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை அள்ளி வைரலாகின. யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் இவரது டாப்லெஸ் போட்டோவிற்கு லைக் செய்துள்ளனர்.

திட்டிய இயக்குநர்

திட்டிய இயக்குநர்

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தான் தாமதமாக வந்ததாக இயக்குநர் ஒருவர் தன்னை திட்டியதாகவும், ஆனால், தான் சரியான நேரத்தில் மற்றவர்கள் யாரும் வருவதற்கு முன்பாகவே வந்து விட்டதாகவும், ஆடை பிரச்சனை காரணமாக மாற்ற சென்றிருந்த நேரத்தில் இயக்குநர் அப்படி திட்டியது தன்னை பாதித்ததாக கூறினார்.

தொடர்ந்து தொல்லை

தொடர்ந்து தொல்லை

ஒரு முறை திட்டிவிட்டார் அதற்கான விளக்கத்தையும் நான் கொடுத்து விட்டேன். அதன் பிறகும் நான் தாமதமாக வந்ததால் தான் எல்லாமே வீணானது என்பது போல தொடர்ந்து என்னை டார்கெட் செய்தே தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். அதனால், கடுப்பான நான் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து உடனடியாக வெளியேறிவிட்டேன் என சமீபத்திய பேட்டியில் இஷா குப்தா கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்ட இயக்குநர்

மன்னிப்பு கேட்ட இயக்குநர்

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியேறிய நிலையில் படத்தின் புரொடக்‌ஷன் மேனேஜர் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார். ஆனால், நான் வர மாட்டேன் என மறுத்து விட்டேன். அதன் ப்றகு அந்த இயக்குநரே இரண்டு நாட்களுக்கு பிறகு என்னிடம் மன்னிப்பு கேட்ட பின்னரே அந்த படத்தில் மீண்டும் நடித்தேன் எனக் கூறியுள்ளார். நடிகை மல்லிகா ஷெராவத் உடன் இணைந்து நகாப் எனும் படு போல்டான வெப்சீரிஸில் நடித்துள்ளார் இஷா குப்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X