பொன்னியின் செல்வன் ஓவர்.. பிறந்தநாளில் புதுப்பட ஷூட்டிங்கை தொடங்கிய ஜெயம் ரவி.. புது லுக் இதோ!

சென்னை: பிறந்தநாள் அதுவுமா புதுப்பட ஷூட்டிங்கை தொடங்கி உள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

Recommended Video

Ponniyin Selvan shooting முடிந்தது! Jayam Ravi போட்ட பதிவு, கலாய்த்த Karthi

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள 28வது படத்தின் பட பூஜையும் விநாயகர் சதுர்த்தியான இன்று போடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். பட பூஜையில் அவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

பொன்னியின் செல்வன் ஓவர்

பொன்னியின் செல்வன் ஓவர்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் டைட்டில் கதாபாத்திரமான அருள்மொழி வர்மனாக நடிகர் ஜெயம் ரவி நடித்து வருகிறார். சமீபத்தில் தனது போர்ஷன் முடிந்து விட்டதாக ட்வீட் போட்ட ஜெயம் ரவி புதிய படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

ஹேர் கட் பண்ணியாச்சு

ஹேர் கட் பண்ணியாச்சு

பொன்னியின் செல்வன் படத்தில் ராஜாவாக நடித்து வந்த ஜெயம் ரவி அதற்காக நீண்ட தலை முடியுடன் சுற்றித் திரிந்தார். இந்நிலையில், அந்த படத்தில் தனது போர்ஷன் முடிந்த உடனே ஹேர் கட் பண்ணி தற்போது மீண்டும் பழைய சாக்லேட் பாய் லுக்கிற்கு மாறியுள்ளார்.

பிறந்தநாளில் பட பூஜை

பிறந்தநாளில் பட பூஜை

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் JR28 படத்தின் பட பூஜையும் விநாயகர் சதுர்த்தியான இன்று போடப்பட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

கன்டெயினர் கேக்

கன்டெயினர் கேக்

ஜெயம் ரவியின் பர்த்டே கொண்டாட்டமும் கேக் வெட்டி பட பூஜையுடனே கொண்டாடப்பட்ட நிலையில், ஜெயம் ரவி வெட்டும் கேக் கன்டெயினர்கள் நிறைந்த கப்பலாக காட்சியமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக படத்தின் கதைக்கும் இந்த கன்டெயினர் கேக்குக்கும் சம்பந்தம் இருப்பது தெரிகிறது. விரைவில் படத்தின் டைட்டில் வெளியானதும் ரசிகர்களின் கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும்.

ஹீரோயின் யாரு தெரியுமா

ஹீரோயின் யாரு தெரியுமா

கோலிவுட்டில் டஜன் படங்களை கைவசம் வைத்துள்ள நம்ம பிரியா பவானி சங்கர் தான் இந்த படத்திலும் ஹீரோயினாக நடிக்க உள்ளார். ஹரிஷ் கல்யாண், எஸ்.ஜே. சூர்யா, கார்த்தி, அசோக் செல்வன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்த பிரியா பவானி சங்கர் ஜெயம் ரவிக்கு ஹீரோயினாகி உள்ளார்.

கேக்கு முன் கொழுக்கட்டை

கேக்கு முன் கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கொழுக்கட்டை சாப்பிடும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கினார். இந்நிலையில், ஜெயம் ரவியின் கேக் கட்டிங் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X