»   »  கபாலி... மலேசியாவில் ரஜினி நடித்த பாடல் காட்சி ஷூட்டிங்!

கபாலி... மலேசியாவில் ரஜினி நடித்த பாடல் காட்சி ஷூட்டிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்தில் ரஜினி பாடும் பாடல் காட்சியின் படப்பிடிப்பு மலேசியாவில் நேற்று தொடங்கியது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் கபாலி படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. ரஜினி உற்சாகத்துடன் படப்பிடிப்பில் பங்கேற்பதோடு, தன்னைக் காண வரும் ஆயிரக் கணக்கான தமிழர்கள், மலேசியர்கள், சீன, ஜப்பானிய ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். இதற்கென தினமும் சில மணி நேரங்களை ஒதுக்குகிறார் ரஜினி.


Kabali song shoot begins

இதுவரை வசனக் காட்சிகளை மட்டுமே படமாக்கி வந்தனர்.


கபாலியின் முதல் பாடல் காட்சியின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. படத்தில் இடம்பெறும் முக்கியமான பாடல் இது. ரஜினி ரசிகர்களுக்கு சரியான விருந்து எனும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலில் ரஜினிக்கு நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்தவர் நடன இயக்குநர் சதீஷ்.


இதுகுறித்து சதீஷ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "சூப்பர் ஸ்டார் ரஜினியை அணுஅணுவாக ரசித்துப் படமாக்கினேன். சிறு வயதிலிருந்தே அவரைப் பார்த்து வளர்ந்தவன். இன்று நீங்கள் தந்த ஊக்கத்துக்கும், இனிய வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சார். கடவுளுக்கு நன்றி... தலைவா..," என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Song shoot for Rajinikanth's Kabali has begun in Malaysia. Dance master Sathish is choreographing Rajinikanth in the song.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil