»   »  டிரைவர் தும்மியதால் விபரீதம்.. சுவரில் மோதி அப்பளமான கார்.. உயிர் தப்பிய கங்கனா!

டிரைவர் தும்மியதால் விபரீதம்.. சுவரில் மோதி அப்பளமான கார்.. உயிர் தப்பிய கங்கனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தின் கார் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காயங்களுடன் கங்கனா உயிர் தப்பினார்.

இந்திப் பட உலகின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக வலம் வருபவர் கங்கனா ரணாவத். தொடர்ந்து தேர்வு செய்து படங்களில் நடித்து வரும் இவர், குயீன் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர்.

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்துள்ளார் கங்கனா.

சிம்ரன்...

சிம்ரன்...

இந்நிலையில், கங்கனா தற்போது தற்போது ஹன்சன் மேத்தா இயக்கும் ‘சிம்ரன்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவில் நடந்து வருகிறது.

காரில் பயணம்...

காரில் பயணம்...

ஜார்ஜியாவில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட கங்கனா, கார் மூலமாக அட்லாண்டாவில் தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரை உள்ளூர் டிரைவர் ஒருவர் ஓட்டி வர, அவர் அருகில் கங்கனாவின் பாதுகாவலர் உட்கார்ந்து இருந்தார்.

டிரைவருக்கு தும்மல்...

டிரைவருக்கு தும்மல்...

கார் சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவருக்கு தொடர்ச்சியாக தும்மல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், கார் அவரது கட்டுப்பாட்டை இழந்தது.

சுவரில் மோதியது...

சுவரில் மோதியது...

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கங்கனாவின் பாதுகாவலர், தானே காரை ஓட்ட முயற்சித்துள்ளார். ஆனால், அதற்குள்ளாக நிலைதடுமாறிய கார், சாலை ஓரத்தில் இருந்த மதில் சுவரில் பயங்கர வேகத்துடன் மோதியது.

கங்கனாவுக்கு காயம்...

கங்கனாவுக்கு காயம்...

இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் இருந்த கங்கனாவுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உள்காயங்கள் இல்லை...

உள்காயங்கள் இல்லை...

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு பயப்படும்படி உள்காயங்கள் எதுவும் இல்லை என தெரிவித்தனர். இதனால் நெற்றி மற்றும் கை காயங்களுக்கு மட்டும் சிகிச்சைப் பெற்ற கங்கனா பின் தனது அறைக்கு திருப்பினார்.

அதிர்ச்சி...

அதிர்ச்சி...

கங்கனா சாலை விபத்தில் சிக்கிய சம்பவம் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொலைபேசி வாயிலாக அவரிடம் திரையுலக பிரபலங்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.

English summary
'Queen' actress Kangana Ranaut, who is currently filming for Hansal Mehta's 'Simran' in the US, recently miraculously escaped unhurt in a road accident.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil