»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

கார்த்திக்-பிரபு இணைந்து நடிக்கவுள்ள க்ளிக் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகப் போகிறார் கீது மோகன்தாஸ்.

கேரளத்து தேவதையான இவர் கனடாவில் படித்தவர். மோகன்லாலுடன் இணைந்து இவர் நடித்த முதல் படமே சூப்பர்ர்ர்ர் ஹிட் டாகதொடர்ந்து சுரேஷ் கோபியுடன் ஒரு படம். அதுவும் சூப்பர் ஹிட்.

விடுவார்களா கோடம்பாக்கத்துக்காரக்கள். ஓடிப்போய் திருவனந்தபுரத்திலிருந்து அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

தமிழ் ரசிகர்கள் தூக்கத்தை கெடுக்க ஒரு தாஸ் (வசுந்தரா தாஸ்) போதாதென்று இப்போது இந்த கீது தாஸ் வந்திருக்கிறார்.

அக்னி நட்சத்திரம் படத்திற்குப் பிறகு மீண்டும் பிரபு, கார்த்திக் இணைந்து நடிக்கப்போகும் படம் க்ளிக்.

இருவரும் இணைந்து சில படங்களில் நடித்திருந்தாலும் இருவரையும் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்திய படம்அக்னி நட்சத்திரம். இந்தப் படத்திற்குப் பிறகு யாராவது இரண்டு பேர் மோதிக் கொண்டால் நீங்க என்ன பிரபு,கார்த்திக்கா என்று கேட்கும் அளவிற்கு அவர்களது கேரக்டர்கள் பிரபலமாகின.

தற்போது மீண்டும் இணைகிறார்கள் இந்த நட்சத்திர வாரிசுகள். படத்தின் பெயர் க்ளிக். படத்திலல் இன்னொருகதாயநாயகியாக மீனா நடிக்கிறார்.

அக்னி நட்சத்திரத்தில் நடித்தபோது கார்த்திக் இளமைப் பூரிப்பில் இருந்தார். பிரபுவுக்கு தலையில் அப்போதுநிறையவே முடி இருந்தது. இப்போது இருவருமே விக் வைத்துக் கொண்டு தான் படங்களில் கதாநாயகிகளைக்காதலித்து மரத்தை சுற்றி டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இந்த இரு விக் ஹீரோக்களும் க்ளிக் படத்தில் ஒன்று சேருகின்றனர்.

இந்தப் படத்தில் காமடிக்கு விவேக் இருக்கிறார். படத்தை சவுந்தர்ராஜன் இயக்குகிறார். கதை, திரைக்கதை,வசனம் இவரே.

பார்வை ஒன்றே போதுமே படத்தின் சூப்பர் ஹிட் இசையமைப்பாளர் பரணி இசையமைக்கிறார்.

பட பூஜை சென்னை ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள ஆர்.ஆர். தியேட்டரில் நடந்தது. நடிகர் சங்கத் தலைவர்விஜயகாந்த் குத்துவிளக்கேற்றி படத்தைத் துவக்கி வைத்தார். பிரபு, சரத்குமார், மீனா, அ.செ.இப்ராகிம் ராவுத்தர்உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

எஸ்.வி. சேகர் காட்டுல மழை!

நாடகங்களில் கலக்கிய எஸ்.வி.சேகர் அவ்வப்போது சினிமாக்களிலும் தலை காட்டுவது வழக்கம். இடையில்காணாமல் போயிருந்த எஸ்.வி.சேகருக்கு மீடியா ட்ரீம்ஸ் நிறுவனம் ஒரு புதிய படத்தை இயக்கும் வாய்ப்பைக்கொடுத்தது.

கிருஷ்ண கிருஷ்ணா என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்தார் எஸ்.வி.சேகர். துணுக்குத்தோரணமாக அமைந்துள்ள இந்தப் படம் இப்போது வசூலைக் குவித்துக் கொண்டுள்ளதாம்.

எதிர்பாராத அளவுக்கு வசூல் நன்றாக இருப்பதால் எஸ்.வி.சேகரும், மீடியா ட்ரீம்ஸ் நிறுவனமும் சந்தோஷத்தில்இருக்கிறார்களாம்.

அடுத்து ஒரு படத்தை சேகருக்குக் கொடுக்க மீடீயா ட்ரீம்ஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

காட்டுல மழை என்ற நாடகத்தைக் கொடுத்த எஸ்.வி.சேகரின் காட்டில் உண்மையிலேயே இப்போது மழை!

அசத்துங்க ரமேஷ்!

காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறார். சமீப காலமாக இவர் நடித்துள்ள படங்கள்நன்றாகப் போவதால் ரொம்ப குஷியாக இருக்கிறாராம்.

அசத்தல், கிருஷ்ண கிருஷ்ணா இரண்டு படங்களும் நன்றாகப் போவதால் மனிதர் ஜாலியாக இருக்கிறாராம்.அவரது கையில் இப்போது 10க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளதாம்.

விரைவில் மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். ஆனால் முதல் படத்தைப் போல இல்லாது இந்தப்படம் ஜாலியான சப்ஜெக்டாக இருக்குமாம். ஸ்கிரிப்ட் கூட ரெடியாம். விரைவில் பூஜை போட திட்டம் உள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil