»   »  கலக்க வரும் புது ஜோடி

கலக்க வரும் புது ஜோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவுண்டமணி, செந்திலுக்குப் பிறகு தமிழில் இரட்டையர் ஜோடி செட் ஆகவில்லை. அதை தீர்க்கும் வகையில் சந்தானமும், கருணாஸும் கை கோர்த்து கலக்க வருகின்றனர்.

உலக அளவில் பெரும் பிரபலமான இரட்டை காமெடியர்கள் லாரல், ஹார்டி. அதேபோல தமிழ் சினிமாவில் வெகு பிரபலமானவர் கவுண்டமணியும், செந்திலும்.

இந்த இரட்டையர்களின் காமெடியை இன்றும் கூட அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் தவறாமல் பார்க்க முடிகிறது. வடிவேலுவும், விவேக்கும் கலக்கிக் கொண்டுள்ள நிலையிலும் கூட கவுண்டமணியும், செந்திலும் இன்றும் கூட எவர்க்ரீன் காமெடி இரட்டையர்களாக டிவி சானல்களில் வலம் வந்துகொண்டுதான் உள்ளனர்.

பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இருவரும் சேர்ந்து நடிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் புதிதாக ஒரு காமெடி ஜோடி தமிழ் சினிமாவில் கை கோர்த்து கலக்க களம் புகுந்துள்ளது.

சந்தானமும், கருணாஸும் இணைந்து தனுஷ் நடிக்கும் பொல்லாதவனில் பின்னி எடுத்து பிரளயத்தை உருவாக்கியுள்ளனராம். இப்படத்தில் இருவரும் செய்த காமெடிக்கு படப்பிடிப்பு தளத்திலேயே பிரமாதமான வரவேற்பு கிடைத்ததாம்.

இதையடுத்து பொல்லாதவனில் மக்களிடையே கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இருவரும் இணைந்து கலக்க முடிவு செய்துள்ளனராம்.

கவுண்டமணி, செந்திலை பீட் பண்ணுமா இந்த புதிய காமெடி ஜோடி?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil