»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரதமர் வாஜ்பாயின் கவிதை ஆல்பம் ஒன்றுக்காக அவருடன் பார்த்திபன்-சீதாவின் மகளான கீர்த்தனா நடித்தாள்.

டெல்லியில் உள்ள வாஜ்பாயின் வீட்டில் இந்தப் படப்பிடிப்பு நடந்தது.

படப்பிடிப்பு தொடங்கும் முன் வாஜ்பாயைப் பார்த்து நீ டென்ஷன் ஆகிவிடாமல் தைரியமாக நடிக்க வேண்டும்என்று கீர்த்தனாவிடம் அந்த ஆல்பத்தின் இயக்குநர் பிரியதர்ஷன் அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தார்.

இதைக் கவனித்த வாஜ்பாய் கீர்த்தனாவைக் கூப்பிட்டு, உனக்குத்தான் ஏற்கனவே நடித்த அனுபவம் இருக்கிறதே.நான் தான் இங்கே புதுமுகம். எனக்குத் தான் டென்ஷன் ஆக உள்ளது. நீ ரிலாக்ஸ் ஆகிட்டே என்று தமாசுடன்கூறினார்.

பின்னர் தான் எப்படி நடிக்க வேண்டும் என்று பிரியதர்ஷனிடம் வாஜ்பாய் கேட்டார். நீங்கள் எழுதுவது போலநடிக்க வேண்டும் என்று பிரியதர்ஷன் கூறியவுடன், வாஜ்பாய் உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார்.

இல்லை. ஆக்ஷன்... ரெடி என்று நாங்கள் கூறிய பிறகே நீங்கள் நடித்தால் போதும் என்று பிரியதர்ஷன் கூறினார்.

பின்னர் அந்தக் காட்சியும் வாஜ்பாயிடம் கீர்த்தனா கொடி விற்பது போன்ற காட்சியும் படமாக்கப்பட்டன.

படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு கீர்த்தனாவுடன் வந்த நடிகர் பார்த்திபன் தன்னுடைய "கிறுக்கல்கள்" கவிதைத்தொகுப்பை வாஜ்பாயிடம் கொடுத்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil