»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

போலீஸ் வேடத்தில் நடிக்க தொப்பை புகழ் கிரண்தான் சரி என்று முடிவெடுத்தார்கள் போலும், ஷிவராம்படக்குழுவினர்!

ஏவி.எம் தயாரிப்பு, சரண் இயக்கம், விக்ரம் ஹீரோ என்று பெரிய கூட்டணியில் உருவான ஜெமினி படத்தில்கலக்கலாக அறிமுகமானார் கிரண். பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

சிலிம் சிம்ரன், சிக் த்ரிஷா என்று கோலிவுட்டே ஒல்லியான கதாநாயகிகள் பின்னே போனபோது, கிரண் தனதுதொப்பையை தமிழக போலீஸாரின் தொப்பை ரேஞ்சுக்கு வளர்த்தார்.

பாடல் காட்சியில் இவர் ஒரு பக்கம் ஆட,இவரது தொப்பை இன்னொரு பக்கம் ஆடியதால் ரசிகர்களிடம் இவர் வரவேற்பைப் பெறவில்லை.

மேலும் அநியாயத்துக்கு கவர்ச்சி காட்டினார்.

இனிமேல் இவரிடம் காட்டுவதற்கு எதுவும் இல்லை என்ற லேவல்வந்தபோது கோடம்பாக்கம் இவருக்கு குட்பை சொன்னது.

இதனால் தனது சொந்த ஊருக்கு பிளைட் பிடித்தார்கிரண்.

ஆனாலும் அடிக்கடி சென்னைக்கு வந்து முன்னணி டைரக்டர்கள், ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள் எனபலருக்கும் பார்ட்டி வைத்து கவனித்தார்.


இந்த கவனிப்புக்கு விடையாக ஷிவ்ராம் என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்க சான்ஸ்கொடுத்திருக்கிறார்கள். படத்தில் காதல் தோல்வியால் கிராமத்தை விட்டு நகரத்துக்கு வரும் கிரணுக்கு போலீஸ்வேலை கிடைக்கிறது.

பாடகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வரும் அபினு (புதுமுகம்) ஒரு கொலையைப் பார்க்க நேரிடுகிறது.வில்லன்களை அவரைத் துரத்த, அவர் கிரணிடம் அடைக்கலம் ஆகிறார். வில்லன்களை கிரண் எப்படி சம்ஹாரம்செய்கிறார் என்பதுதான் கதை.

கிரண், அபினுவுடன் அபிதா, ப்ரித்தி வர்மா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இதில் இசையமைப்பாளர்சந்திரபோஸின் மகன் சந்தோஷ போஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

படத்தை இயக்குவது புதுவரவான ஷாமி.

ஸ்டார் வேல்யூ இல்லாதவர்களும், புதுமுகங்களும் இணைந்து எடுப்பதால், இது ஒரு லோ பட்ஜெட் படம் என்றுநினைத்தால் ஏமாந்து விடுகிறார்கள். உன்னை நானும் என்ற பாடலை 24 லொகேஷன்களில் எடுத்துஅசத்தியிருக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil