»   »  சிடுமூஞ்சி தேவதையே!

சிடுமூஞ்சி தேவதையே!

Subscribe to Oneindia Tamil

மலர் மான்சியும், வண்டு ஹரிகுமாரும் இணைந்து சாலக்குடி அருவிப் பக்கம் ஜிலுஜிலுவென ஆடிப் பாடிய பாடலை திருத்தம் படத்துக்காக சமீபத்தில் சுடச் சுடச் சுட்டுள்ளனர்.

தூத்துக்குடி படத்தின் நாயகனான ஹரிக்குமார் அப்படத்துக்குப் பின்னர் கவனிக்கப்பட வேண்டிய நாயகர்களில் ஒருவராக மாறினார். டான்ஸ் டைரக்டராக பல நூறு படங்களில் அசத்தியவர்தான் ஹரிக்குமார்.

தூத்துக்குடி படம் அவருக்கு பெரும் திருப்புமுனையைக் கொடுத்தது. இதையடுத்து அவர் நடிக்கும் படம்தான் திருத்தம். முதல் படத்தில் அரிவாளும் கையுமாக ஆக்ரோஷமாக காட்சி தந்த ஹரிக்குமார், திருத்தம் படத்தில் சாப்ட்வேர் பாயாக சமர்த்தாக வருகிறாராம்.

இப்படத்தில் ஹரிக்குமாருக்கு மான்ஸி ஜோடியாக நடிக்கிறார். படு திருத்தமான அழகுடன், பார்த்தவர்கள் மனதில் பக்கென உட்கார்ந்து கொள்ளும் ஒய்யார தேவதையாக இருக்கிறார் மான்ஸி.

சமீபத்தில் சாலக்குடி அருவிப் பகுதியில் மான்ஸி, ஹரிக்குமார் ஆகியோர் இணைந்து பாடிய ஜில் பாட்டை படமாக்கினர். மான்ஸி மயக்கும் காஸ்ட்யூமில் கடங்கார காதலனே என பாட, சிடுமூஞ்சி தேவதையே என்று ஹரிக்குமார் வழிய பாடல் முழுவதும் பரவச மழைதான்.

சாலக்குடி அருவியிலும் அதனை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியிலும் இந்தப் பாட்டை படமாக்கியுள்ளனராம். பாட்டு முழுக்க படு குளிர்ச்சியாக காட்சி தருகிறாராம் மான்ஸி.

திருத்தம் மான்ஸிக்கு பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறது திருப்பம் யூனிட்.

கொசுறு:

சமீபகாலமாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ஏர்போர்ட் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கமால் இருந்து வருகிறது. இந்நிலையில் திருத்தம் படப்பிடிப்பை கொச்சி விமான நிலையத்தில் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

திருத்தம் ஜூன் மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil