»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்தாஜோட நிலைமை ரொம்பவும் பரிதாபமாகப் போய் விட்டது. கதாநாயகியாக அறிமுகமாகி, இரண்டாவதுகதாநாயகியாக நடித்து, பின்பு ஒரு பாட்டுக்கு நடனம் ஆடத் தொடங்கினார்.

இப்போது அதுவும் போய், கோவை சரளாவுக்கு போட்டியாக நகைச்சுவை வேடத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.செல்லமே படத்தில் விவேக்கிற்கு மும்தாஜ்தான் ஜோடி.

விஷால்-ரீமா சென் ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் பானுப்பிரியாவும் இருக்கிறாராம். படத்தில் அதிகம் கவர்ச்சிகாட்டாமல் நடித்து வருகிறாராம் மும்தாஜ்.

மும்தாஜின் குண்டான உடல் நகைச்சுவை கேரக்டருக்கு அவ்வளவு அற்புதமாகப் பொருந்துகிறது என்றுபடப்பிடிப்புக் குழுவினர் சொல்கிறார்கள்.

மீண்டும் ஜனகராஜ்

என் தங்கச்சிய பாம்பு கட்சிடுச்சுப்பா!

இந்த டயலாக்கையும், அதை அட்டகாசமாக டெலிவரி செய்து அசத்தியிருந்த ஜனகராஜையும் ரசிகர்கள்மறந்திருப்பார்கள். ஆனால் ஜனகராஜின் நடிப்புத் திறமையை மறக்காத மணிரத்னம், அவரது நடிப்பை தனதுஆய்த எழுத்தில் அருமையாக பயன்படுத்தியுள்ளார்.

மெட்ராஸ் தமிழை அட்டகாசமாகப் பேசி நடிக்கும் ஒரு சில நடிகர்களில் ஜனகராஜுக்கு தனி இடம் உண்டு. அவரதுநடிப்பும் தனி பாணியில்தான் இருக்கும். முன்பு ரஜினி, கமல் படங்களில் இவருக்கு கட்டாயம் ஒரு ரோல்இருக்கும்.

இடையில் ஏற்பட்ட உடல் நலக் கோளாறால் ஜனகராஜ் தற்காலிகமாக வெள்ளித் திரைக்கு முழுக்குப் போட்டார்.உடல் நலம் தேறி எழுந்தால் விவேக்கும், வடிவேலுவும் எங்கேயோ போய் விட்டார்கள். ஜனகராஜின் மார்க்கெட் காலியாகி விட்டது ஜனகராஜுக்கு. இருந்தாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு படத்தில் துண்டு துக்கடா ரோல்களில்நடித்து வந்தார் ஜனகராஜ்.

இப்போது அவரது நடிப்புக்கு நல்ல தீனி போட்டுள்ளார் மணிரத்னம். தனது ஆய்த எழுத்துப் படத்தில் "வில்லன்"பாரதிராஜாவின் நண்பராக ஜனகராஜுக்கு நல்ல ரோல் கொடுத்துள்ளாராம்.

பாரதிராஜாவின் நடிப்பு போல, ஜனகராஜின் கேரக்டரும் நன்றாகப் பேசப்படுமாம். ஜனகராஜும்கலக்கியுள்ளாராம்.

மறுபடியும் தூள் கெளப்பு அண்ணாத்தே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil