»   »  நெஞ்சை அள்ளும் நீபா

நெஞ்சை அள்ளும் நீபா

Subscribe to Oneindia Tamil

காதல் ரசம் சொட்டச் சொட்ட செல்லத் திருடா படத்தில் நடித்து வருகிறார் நீபா.

காதல் ரசம் சொட்டச் சொட்ட செல்லத் திருடா படத்தில் நடித்து வருகிறார் நீபா.

நெகுநெகுவென இருக்கும் நீபாவுக்கு சினிமா புதிதல்ல. அவரது அம்மா அந்தக் காலத்தில் பெரிய குரூப் டான்ஸர். ஆட்டக்கார அம்மாவுக்குப் பிறந்த மகள் மட்டும் சும்மாவா இருப்பார். நீபாவும் டான்ஸில் பின்னி எடுக்கிறார்.

நீபாவின் நவரச நடிப்பில் உருவாகி வரும் படம் செல்லத் திருடா. இதில் நீபா ஆட்டத்திலும், கிளாமரிலும் அட்டாக் செய்திருக்கிறாராம். நடிப்பை விட கிளாமரில்தான் கிறங்கடித்திருக்கிறாராம்.

செல்லத் திருடா ஷூட்டிங் ஸ்பாட் பக்கம் தெரியாத்தனமாக போய் விட்டோம். அங்கு நீபா இருந்த கோலத்தைப் பார்த்து வியர்த்து, விக்கித்துப் போய் விட்டோம். நீச்சல் குளத்தில் நெகுநெகுவென நீந்திக் கொண்டிருந்தார் நீபா.

மேலே வரும் வரை காத்திருந்த, குளத்தை விட்டு மேலே வந்த பின்னர் லபக்கெனப் பிடித்து வாயைக் கிண்டினோம். படம் பூரா இப்படித்தானா என்ற நமக்கு, அப்படித்தான் நினைக்கிறேன் என்று பொத்தாம் பொதுவாக பொத்தியது போல சொல்லி வைத்து விட்டு வெட்கத்துடன் நகர்ந்தார் நீபா.

அந்தப் பக்கமாக வந்த இயக்குநரை இழுத்து வைத்து என்னண்ணே மேட்டர் என்றபோது, எட்டு அழகான இளம் பெண்கள், அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். யார் அவர்களைக் கொன்றது என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ் என்ற அவர் படத்தில் முக்கியமான விஷயமே கிளாமர்தான்.

இதுவரைக்கும் எந்தப் படத்திலும் இப்படி ஒரு கிளாமரை பார்த்திருக்க மாட்டீர்கள். அதேசமயம், ஆபாசம் இல்லாமல், அழகாக படமாக்கயிருக்கிறோம் என்றார் இயக்குநர்.

படம் பூராவும் இளமைத் துள்ளல் கலக்கலாக வந்திருக்கிறதாம். குறிப்பாக நீபா வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களின் இதயம் இடியென துடித்து துவளப் போவது நிச்சயமாம்.

படத்ைத அள்ளுகிறாரோ இல்லையோ, நிச்சயம் ரசிகர்களின் நெஞ்சை அள்ளப் போகிறார் நீபா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil