»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil


சூர்யாவை வைத்து சூப்பர் ஹிட் படமான நந்தாவைத் தந்த அபராஜித் பிலிம்சின் அடுத்த படமான மெளனம் பேசியதே படப்பிடிப்புமுடிவடைந்து நவம்பர் மாத ரிலீசுக்குத் தயாராகிவிட்டது.

நடிகர் சூர்யா- அபராஜித் பிலிம்ஸ் இணைந்துள்ள இரண்டாவது படம் இது. சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மிக இயல்பானஇளம் காதல் கதையாம்.

இயக்குனர் பாலாவிடம் அசோசியேட்டாகப் பணியாற்றிய அமீர் தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர் பாலாவிடம் சேது,நந்தாவில் பணியாற்றியவர்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் dts பிரம்மாணடத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் படம். கேசட்டுகள் வரும் அக்டோபர் முதல்வாரத்தில் ரிலீஸ் ஆகும் என்கிறது தயாரிப்பாளர் வட்டாரம். பாடல்கள் படு அசத்தலாக வந்துள்ளதாகத் தெரிகிறது.

நியுசிலாந்து, மொரீசியஸ், இத்தாலி, எகிப்து என உலகின் பல பகுதிகளிலும் படமாக்கப்பட்டிருக்கிறது மெளனம் பேசியதே. பாண்டிச்சேரிஉள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்போது படத்தின் டப்பிங், ரீ-ரெக்கார்டிங் நடந்து வருகிறது.

டும்..டும்..டும் படத்தில் கேமராவை அட்டகாசமாகக் கையாண்ட, குறிப்பாக பாடல் காட்சிகளில், ராம்ஜி தான் இந்தப் படத்தின் கேமராமேன். எகிப்த்தையும் நியூசிலாந்தையும் நம் கண் முன் நிறுத்துவார் என்று நம்பலாம்.

படம் நவம்பர் 3வது வாரத்தில் ரிலீசாகிறது. இதில் நந்தா (சென்டிமெண்ட்!) என்ற புதுமுகத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளார்கள் இந்தஎன்.ஆர்.ஐ.தயாரிப்பாளர்கள். இவர் தவிர இந்தி தேவதாசில் நடித்த மும்பையைச் சேர்ந்த மாடல் மகா, டான்ஸ் மாஸ்டராக இருந்துநடிகரான அஞ்சு மகேந்திரா ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கு பாடல்களில் மிகத் திருப்தியாம். அந்த அளவுக்கு பாடல்கள் சூப்பராக வந்துள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.

சுரேஷ் அர்ஸ் எடிட்டிங்கை கவனிக்க, ஆர்ட் டைரக்ஷனை ராஜீவனும், ஸ்ட்ன்ட் சிவா பைட்களையும் கையாண்டுள்ளனர்.அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பாளர்களான கணேஷ் ரகு, கார்த்திக் ராதாகிருஷ்ணன், வெங்கி நாராயணன், ராஜன் ராதாகிருஷ்ணன் பற்றிதெரியாதவர்களுக்கு...

இந்த நால்வரும் அமெரிக்காவில் வசித்து வரும் சாப்ட்வேர் ஆசாமிகள். நல்ல தமிழ் சினிமா கொடுக்கும் நோக்கத்துடன் இந்த ஏரியாவில்நுழைந்தவர்கள்.

ஆல் த பெஸ்ட் அபராஜித் டீம் !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil