»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

காதல் அரங்கம் படத்தில் அரை நிர்வாணமாக நடிக்கிறார் ப்ரீத்தி

பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாதவர் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் வேலு பிரபாகரன். பெரியார்கொள்கைகளால் கவரப்பட்ட பழுத்த நாத்திகவாதி.

வியாபார நோக்கத்தைப் பெரிதாகக் கருதாமல் கடவுள், புரட்சிக்காரன் போன்ற படங்களை இயக்கியவர்.இப்போது காதல் அரங்கம் படத்தை எடுத்து வருகிறார்.

இப்படம் பற்றி அவர் கூறுகையில், தமிழகத்தில் செக்ஸ் குறித்து முறையான விழிப்புணர்ச்சி இல்லை. அந்தக்குறையைப் போக்கவே இந்தப் படம் எடுத்து வருகிறேன் என்கிறார். படத்தில் நிர்வாணக் காட்சிகள் ஏகத்துக்கும்உண்டாம்.

கதாநாயகியாக நடிப்பவர் ப்ரீத்தி. ஏவாள் உடையணிந்து நடிப்பது நீங்கள்தானா என்று கேட்டால், முழுநிர்வாணமாக நடிப்பது ஒரு துணை நடிகை. நான் அரை நிர்வாணமாகத் தான் நடிக்கிறேன் என்று அடக்கமாக(?!)கூறுகிறார்.

ஆடை விஷயம் மட்டுமல்ல, எல்லா விஷயங்களிலும் ப்ரீத்தி துணிச்சலானவர்தானாம். மும்பையில் இவர் வசிக்கும்பகுதியில், திருட்டை தவிர்க்க இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து இரவில் ரோந்து வருவார்களாம். அதில் இடம் பெறும்ஒரே ஒரு பெண் ப்ரீத்திதானாம்.

அதே தைரியத்தோடு காதல் அரங்கம் படத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார். பல காட்சிகள் கவர்ச்சியின்உச்சம் என்கிறார்கள்.

வேலு பிரபாகரன், இந்தப் படம் வெளிவந்தவுடன் மக்களுக்கு செக்ஸ் பற்றிய அடிப்படை அறிவு எல்லாருக்கும்கிடைத்து விடும். படத்தை வெளியிட விடாமல் சென்ஸார் போர்டு தடுத்தால், மக்களைத் திரட்டி போராட்டம்நடத்துவேன் என்கிறார்.

மக்களுக்கு அறிவு கிடைப்பதை சென்ஸார் போர்டு தடுக்குமா என்ன? துள்ளுவதோ இளமை, பாய்ஸ் எல்லாம்வந்திருக்கே!!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil