twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சந்திரமுகி.. ரஜினி திருவிழா தமிழ்ப் புத்தாண்டையொட்டி ரஜினி திருவிழாவுக்கு அவரது ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள்.அன்று வெளியாகப் போகும் சந்திரமுகிக்காக திரையரங்குகளை ஜோடிக்கும் வேலையை ரசிகர்கள் இப்போதே ஆரம்பித்துவிட்டனர்.சந்திரமுகியை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டுவது, வால் பெயிண்டிங் செய்வது என பரபரப்புகளை தொடங்கிவிட்டனர்.சினிமா விஷயத்தில் எப்போதுமே தமிழகத்துக்கே முன்னோடியாக இருக்கும் மதுரையில் ரஜினி ரசிகர்கள் ஒரு படி மேலேயேபோய்விட்டனர். சந்திரமுகி வெற்றி பெற வேண்டி காப்பு கட்டிக் கொண்டு விரதம் இருக்க ஆரம்பித்துள்ளனர் ரஜினி பக்தர்கள்.. ஸாரிரசிகர்கள்.சிவப்பு வேட்டி, உடம்பெல்லாம் சந்தனப் பூச்சு, நெற்றியில் பட்டை, கழுத்தில் கொட்டை என இந்த ரசிகர்கள் சந்திரமுகிக்காக அடுத்த 15நாட்களுக்கு தீவிர விரதமாம். கவுச்சி அயிட்டத்தையெல்லாம் இவர்கள் தொடப் போவதில்லையாம். டாஸ்மாக் கடை பக்கமோ மதுரைபுரோட்டா கடைகள் பக்கமோ ஒதுங்க மாட்டார்களாம்.கோவிலில் விஷேசம் என்றால் கொடியேற்றத்துடன் தானே அதைத் தொடங்குவோம். அது மாதிரி இந்த ரசிகர்களும் தங்களது விரதத்தைரஜினி மன்றத்தின் கொடியை கையில் உயர்த்தியபடியே தொடங்கி அமர்க்களப்படுத்திவிட்டனர்.பி.வாசு இயக்கி இருப்பதால் மினிமம் கியாரண்டியாவது இருக்கும் என்று எதிர்பார்க்கும் ரசிகர்கள், படம் நிச்சயம் பாபா மாதிரி சூப்பராகஇருக்காது என்ற அதீத நம்பிக்யிைல் இருக்கிறார்கள்.14ம் தேதி தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகியவற்றில் திரையிடப்படும் சந்திரமுகி, அடுத்த நாளே அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகளிலும் வெளியாகிறது. நியூஜெர்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 6 காட்சிகள் இப் படம் திரையிடப்படுகிறதாம்.பாபா படம் வெளியானபோது ரஜினியின் பாபா போஸ் லோகோவுடன் கூடிய வாட்ச், பனியன் ஆகியவற்றையும் தாங்களே விற்பது என்றமுடிவுக்கு வந்தார் லதா ரஜினிகாந்த், அதிலும் காசு பார்க்கும் திட்டத்துடன். பாபா ரஜினி படத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாதுஎன்றும் உத்தரவிட்டார்கள்.ஆனால், இரண்டாவது நாளே புவாத்து ஆகிவிட பாபா படம் போட்ட வாட்ச், பனியன் வாங்க ஆள் தேடி அலையும் நிலை ஏற்பட்டது.இந்த முறை அப்படியாப்பட்ட ரிஸ்க் ஏதும் எடுக்கப் போவதில்லையாம். அதே நேரத்தில் படத்தில் ரஜினி பயன்படுத்திய காஸ்ட்யூம்கள்,வாட்ச்கள் உள்ளிட்டவற்றை ஏலம் விடப் போகிறார்களாம் (ரஜினி விக்கை ஏலம் விடலயாப்பா?). கூடவே நயனதாரா பயனபடுத்தியசேலைகளும் இன்டர்நெட் மூலம் ஏலத்துக்கு வரப் போகிறதாம்.இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை சிவாஜி-பிரபு அறக்கட்டளையில் சேர்த்து அதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவப்போகிறார்களாம்.சந்திரமுகிக்காக ரஜினிக்கு விக் தயாரானது லண்டனிலாம். ரஜினியின் பழைய படங்களை அங்கு அனுப்பி வைத்து அதைப் போன்றதோற்றத்தை மீண்டும் தரும் விக்கை லண்டன் காஸ்ட்யூம் நிபுணர்கள் தயாரித்தார்களாம்.படத்தைப் பற்றி பத்திரிக்கைகள் நன்றாக ஏத்தி எழுத வேண்டுமென்பதற்காக சிவாஜி பிலிம்ஸ் பெரும் அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது.படத்தின் கேஸட் ரிலீஸ் அன்று சில குறிப்பிட்ட செய்தித் தாள்களின் நிருபர்களுக்கு சிறப்பு கவனிப்பு செய்தார்கள். அதாவது குட்டிபீரோவை பரிசாக தந்து அனுப்பியிருக்கிறார்கள்.சந்திரமுகியின் பாடல் காட்சிகள் பெங்களூர், மைசூர், இஸ்தான்புல்லில் எடுக்கப்பட்டுள்ளன. முத்துவில் வந்த தில்லானா தில்லானா பாட்டுப்புகழ் தருண்குமார், ராஜு சுந்தரம், பிருந்தா ஆகியோர் நடன அமைப்பைக் கவனித்திருக்கிறார்கள்.சண்டைக் காட்சிகளை தளபதி திணேஷ் கவனித்துள்ளார். பல சண்டைக் காட்சிகளில் ரஜினி டூப் போடாமலேயே நடித்து அசத்தியிருக்கிறார்.ரஜினிக்கு இணையாக வடிவேலுவின் கேரக்டர் வைக்கப்பட்டுள்ளதாம்.இதற்கிடையே கடும் போட்டிக்கிடையே சந்திரமுகி படத்தின் டிவி ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி வாங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.வழக்கமாக கோலிவுட்டில் ஏதாவது ஒரு படம் பூஜை போடப்பட்டால் உடனே அதற்கான உரிமையை (படம் முடியுதோ, இல்லையோ!)வாங்கி விடுவது சன் டிவியின் வழக்கம். அதுபோலவே சந்திரமுகியையும் வாங்க அது முயற்சிகளைத் தொடங்கியது.ஆனால், ரஜினிக்கு பிடிக்காதவர்கள் பட்டியலில் சமீபத்தில் திமுக சேர்ந்துவிட்டதால் சன் டிவிக்கு சந்திரமுகி கிடைக்கவில்லையாம். நல்லவிலை கொடுத்தே படத்தை வாங்கியிருக்கிறதாம் ஜெயா டிவி. இதனால் படத்துக்கு ஜெயா டிவியில் நல்ல பில்டப் கொடுக்குமாறும் "அம்மா"உத்தரவிட்டுள்ளாராம்.சந்தரமுகியின் வினியோக உரிமையை வாங்க திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான பொன்முடி, ரகுபதி ஆகியோர் களம்இறங்கினராம். அதுவும் அவர்கள் கேட்டது சென்னை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களை.ஆனால் இவர்களது நோக்கம் ரஜினிக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியதாம். ரூ. 3 கோடி வரை மட்டுமே பிசினஸ் ஆகும் ஏரியாவைப்பிடிக்க பொன்முடி ரூ. 5 கோடி வரை தரத் தயாராக இருந்தாராம்.அதிகபட்ச பிசினஸே 3 கோடி என்றிருக்கும்போது எதற்காக 5 கோடி வரை பொன்முடி இறக்குகிறார் என்று ரஜினியை சிலர்உஷார்படுத்தியுள்ளனர். இதனால் பொன்முடிக்கு தருவதை மறுபரிசீலனை செய்யுமாறு பிரபு, ராம்குமாரிடம் சொல்லிவிட்டாராம் ரஜினி.பி.வாசு மலையாளி என்பதாலோ என்னவோ சந்திரமுகியில் ஏகப்பட்ட மலையாளிகள் நடித்திருக்கிறார்கள். பிரேம் நசீர் முதல் நம்ம ஊர்கமல்ஹாசன் வரை பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள பழம்பெரும் அழகி செம்மீன் ஷீலா இதில் பிரபுவின் அத்தையாக நடித்துள்ளார்.குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய இன்னொரு மலையாளி கே.ஆர்.விஜயா.இந்தப் படம் ரிலீஸ் ஆன பின்னர் ரிசல்டை பார்த்துவிட்டு எடிட்டர் மோகனின் (ஜெயம் ரவியின் அப்பா) தயாரிப்பில் அவரது மகன் ராஜாஇயக்கத்திலோ அல்லது ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீசிலோ ஒரு படம் பண்ண இருக்கிறாராம் ரஜினி.

    By Staff
    |
    தமிழ்ப் புத்தாண்டையொட்டி ரஜினி திருவிழாவுக்கு அவரது ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள்.

    அன்று வெளியாகப் போகும் சந்திரமுகிக்காக திரையரங்குகளை ஜோடிக்கும் வேலையை ரசிகர்கள் இப்போதே ஆரம்பித்துவிட்டனர்.சந்திரமுகியை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டுவது, வால் பெயிண்டிங் செய்வது என பரபரப்புகளை தொடங்கிவிட்டனர்.

    சினிமா விஷயத்தில் எப்போதுமே தமிழகத்துக்கே முன்னோடியாக இருக்கும் மதுரையில் ரஜினி ரசிகர்கள் ஒரு படி மேலேயேபோய்விட்டனர். சந்திரமுகி வெற்றி பெற வேண்டி காப்பு கட்டிக் கொண்டு விரதம் இருக்க ஆரம்பித்துள்ளனர் ரஜினி பக்தர்கள்.. ஸாரிரசிகர்கள்.

    சிவப்பு வேட்டி, உடம்பெல்லாம் சந்தனப் பூச்சு, நெற்றியில் பட்டை, கழுத்தில் கொட்டை என இந்த ரசிகர்கள் சந்திரமுகிக்காக அடுத்த 15நாட்களுக்கு தீவிர விரதமாம். கவுச்சி அயிட்டத்தையெல்லாம் இவர்கள் தொடப் போவதில்லையாம். டாஸ்மாக் கடை பக்கமோ மதுரைபுரோட்டா கடைகள் பக்கமோ ஒதுங்க மாட்டார்களாம்.

    கோவிலில் விஷேசம் என்றால் கொடியேற்றத்துடன் தானே அதைத் தொடங்குவோம். அது மாதிரி இந்த ரசிகர்களும் தங்களது விரதத்தைரஜினி மன்றத்தின் கொடியை கையில் உயர்த்தியபடியே தொடங்கி அமர்க்களப்படுத்திவிட்டனர்.

    பி.வாசு இயக்கி இருப்பதால் மினிமம் கியாரண்டியாவது இருக்கும் என்று எதிர்பார்க்கும் ரசிகர்கள், படம் நிச்சயம் பாபா மாதிரி சூப்பராகஇருக்காது என்ற அதீத நம்பிக்யிைல் இருக்கிறார்கள்.

    14ம் தேதி தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகியவற்றில் திரையிடப்படும் சந்திரமுகி, அடுத்த நாளே அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகளிலும் வெளியாகிறது. நியூஜெர்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 6 காட்சிகள் இப் படம் திரையிடப்படுகிறதாம்.

    பாபா படம் வெளியானபோது ரஜினியின் பாபா போஸ் லோகோவுடன் கூடிய வாட்ச், பனியன் ஆகியவற்றையும் தாங்களே விற்பது என்றமுடிவுக்கு வந்தார் லதா ரஜினிகாந்த், அதிலும் காசு பார்க்கும் திட்டத்துடன். பாபா ரஜினி படத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாதுஎன்றும் உத்தரவிட்டார்கள்.

    ஆனால், இரண்டாவது நாளே புவாத்து ஆகிவிட பாபா படம் போட்ட வாட்ச், பனியன் வாங்க ஆள் தேடி அலையும் நிலை ஏற்பட்டது.

    இந்த முறை அப்படியாப்பட்ட ரிஸ்க் ஏதும் எடுக்கப் போவதில்லையாம். அதே நேரத்தில் படத்தில் ரஜினி பயன்படுத்திய காஸ்ட்யூம்கள்,வாட்ச்கள் உள்ளிட்டவற்றை ஏலம் விடப் போகிறார்களாம் (ரஜினி விக்கை ஏலம் விடலயாப்பா?). கூடவே நயனதாரா பயனபடுத்தியசேலைகளும் இன்டர்நெட் மூலம் ஏலத்துக்கு வரப் போகிறதாம்.

    இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை சிவாஜி-பிரபு அறக்கட்டளையில் சேர்த்து அதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவப்போகிறார்களாம்.

    சந்திரமுகிக்காக ரஜினிக்கு விக் தயாரானது லண்டனிலாம். ரஜினியின் பழைய படங்களை அங்கு அனுப்பி வைத்து அதைப் போன்றதோற்றத்தை மீண்டும் தரும் விக்கை லண்டன் காஸ்ட்யூம் நிபுணர்கள் தயாரித்தார்களாம்.

    படத்தைப் பற்றி பத்திரிக்கைகள் நன்றாக ஏத்தி எழுத வேண்டுமென்பதற்காக சிவாஜி பிலிம்ஸ் பெரும் அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது.படத்தின் கேஸட் ரிலீஸ் அன்று சில குறிப்பிட்ட செய்தித் தாள்களின் நிருபர்களுக்கு சிறப்பு கவனிப்பு செய்தார்கள். அதாவது குட்டிபீரோவை பரிசாக தந்து அனுப்பியிருக்கிறார்கள்.

    சந்திரமுகியின் பாடல் காட்சிகள் பெங்களூர், மைசூர், இஸ்தான்புல்லில் எடுக்கப்பட்டுள்ளன. முத்துவில் வந்த தில்லானா தில்லானா பாட்டுப்புகழ் தருண்குமார், ராஜு சுந்தரம், பிருந்தா ஆகியோர் நடன அமைப்பைக் கவனித்திருக்கிறார்கள்.

    சண்டைக் காட்சிகளை தளபதி திணேஷ் கவனித்துள்ளார். பல சண்டைக் காட்சிகளில் ரஜினி டூப் போடாமலேயே நடித்து அசத்தியிருக்கிறார்.ரஜினிக்கு இணையாக வடிவேலுவின் கேரக்டர் வைக்கப்பட்டுள்ளதாம்.

    இதற்கிடையே கடும் போட்டிக்கிடையே சந்திரமுகி படத்தின் டிவி ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி வாங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.

    வழக்கமாக கோலிவுட்டில் ஏதாவது ஒரு படம் பூஜை போடப்பட்டால் உடனே அதற்கான உரிமையை (படம் முடியுதோ, இல்லையோ!)வாங்கி விடுவது சன் டிவியின் வழக்கம். அதுபோலவே சந்திரமுகியையும் வாங்க அது முயற்சிகளைத் தொடங்கியது.

    ஆனால், ரஜினிக்கு பிடிக்காதவர்கள் பட்டியலில் சமீபத்தில் திமுக சேர்ந்துவிட்டதால் சன் டிவிக்கு சந்திரமுகி கிடைக்கவில்லையாம். நல்லவிலை கொடுத்தே படத்தை வாங்கியிருக்கிறதாம் ஜெயா டிவி. இதனால் படத்துக்கு ஜெயா டிவியில் நல்ல பில்டப் கொடுக்குமாறும் "அம்மா"உத்தரவிட்டுள்ளாராம்.

    சந்தரமுகியின் வினியோக உரிமையை வாங்க திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான பொன்முடி, ரகுபதி ஆகியோர் களம்இறங்கினராம். அதுவும் அவர்கள் கேட்டது சென்னை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களை.

    ஆனால் இவர்களது நோக்கம் ரஜினிக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியதாம். ரூ. 3 கோடி வரை மட்டுமே பிசினஸ் ஆகும் ஏரியாவைப்பிடிக்க பொன்முடி ரூ. 5 கோடி வரை தரத் தயாராக இருந்தாராம்.

    அதிகபட்ச பிசினஸே 3 கோடி என்றிருக்கும்போது எதற்காக 5 கோடி வரை பொன்முடி இறக்குகிறார் என்று ரஜினியை சிலர்உஷார்படுத்தியுள்ளனர். இதனால் பொன்முடிக்கு தருவதை மறுபரிசீலனை செய்யுமாறு பிரபு, ராம்குமாரிடம் சொல்லிவிட்டாராம் ரஜினி.

    பி.வாசு மலையாளி என்பதாலோ என்னவோ சந்திரமுகியில் ஏகப்பட்ட மலையாளிகள் நடித்திருக்கிறார்கள். பிரேம் நசீர் முதல் நம்ம ஊர்கமல்ஹாசன் வரை பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள பழம்பெரும் அழகி செம்மீன் ஷீலா இதில் பிரபுவின் அத்தையாக நடித்துள்ளார்.குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய இன்னொரு மலையாளி கே.ஆர்.விஜயா.

    இந்தப் படம் ரிலீஸ் ஆன பின்னர் ரிசல்டை பார்த்துவிட்டு எடிட்டர் மோகனின் (ஜெயம் ரவியின் அப்பா) தயாரிப்பில் அவரது மகன் ராஜாஇயக்கத்திலோ அல்லது ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீசிலோ ஒரு படம் பண்ண இருக்கிறாராம் ரஜினி.

    Read more about: chandramukhi fans rajini ready
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X