»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரவளி, ஷக்கீலா, பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ள அன்புத் தொல்லை படம் சென்சாரில் சிக்கிகடும் அவஸ்தைப்பட்டுவிட்டதாம்.

ஷகீலா மிகவும் குடும்பப்பாங்கான ரோல் செய்துள்ளதாக வெளியில் சொன்னார்கள். ஏதோ,பாசமான அம்மா கேரக்டர் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், படத்தில் விதவையாக நடிக்கும்ஷக்கீலாவுக்கு வெள்ளை சேலையில் குளியல் சீன்களை வைத்து காட்ட வேண்டியதைகாட்டிவிட்டார்களாம்.

இது சென்சார்காரர்களையே நெளிய வைத்துவிட்டதாம்.

போதும் போதும் என்று சொன்னாலும் கேட்காமல் ரவளி காட்டிய கவர்ச்சி தான் சென்சார் போர்ட்ஆசாமிகளை மிகவும் தொல்லைப்படுத்தி இருக்கிறது. அவ்வளவு தூரம் கவர்ச்சியை அள்ளிக்கொட்டியிருக்கிறாராம்.

இதனால் லாங்சைஸ் கத்திரிக் கோலை எடுத்து ஆங்காங்கே படத்தை குதறி எடுத்துவிட்டார்கள்சென்சார்போர்ட்காரர்கள்.

கட் ஆனது போக மிச்சம் மீதி இருந்த பிலிம் ரோலை கிடைத்தவரை அள்ளிப் போட்டுக் கொண்டுஒடி வந்திருக்கிறார் தயாரிப்பாளர்.

இவ்வளவு கட்களுக்குப் பிறகும் படத்தில் கசமுசா காட்சிகளும் சூடான காட்சிகளும் ஏகப்பட்டவைமிசச்சம் இருப்பதாக டைரக்டரும் தயாரிப்பாளரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் இருக்காது என்கிறார்கள்.

தமிழே வேண்டாம் - நக்மா

தமிழ் சினிமாவுக்கு இப்போதைக்குத் திரும்பி வருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் நக்மா.

தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம் நக்மா. மலையாளம் மற்றும் கன்னடப்படங்களில் அவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம். தெலுங்குப் படங்களுக்கும் உடனடியாகபச்சைக் கொடி காட்டி விடுகிறாராம்.

சில தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், அதை நக்மா வேண்டாம் என்றுஒதுக்கிவிட்டதாகவும் தெரிகிறது.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது சித்தியைக் கட்டிய சித்தப்பாவால் ஏற்கப்பட்ட கசப்பானஅனுபவங்களால் தான் தமிழ் சினிமாமே வேண்டாம் என்று ஒதுங்குகிறார் நக்மா என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil