»   »  பழனி பகுதியில் 'சாமி 2' பட ஷூட்டிங்... காக்கிச் சட்டையில் மிரட்டிய விக்ரம்!

பழனி பகுதியில் 'சாமி 2' பட ஷூட்டிங்... காக்கிச் சட்டையில் மிரட்டிய விக்ரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'சாமி 2' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

'துருவ நட்சத்திரம்' மற்றும் 'ஸ்கெட்ச்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'சாமி 2' படத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டார் விக்ரம். 'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்துவிட்டார் விக்ரம்.

அதைத் தொடர்ந்து 'சாமி 2' படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விக்ரம். ஆறுச்சாமி கதாபாத்திரத்துக்காக முழுமையாக மாறியுள்ள விக்ரமின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சாமி 2 விக்ரம்

சாமி 2 விக்ரம்

சென்னையில் தொடங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பில் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து வட இந்தியாவில் சில முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளது படக்குழு.

பழனி பகுதியில் படப்பிடிப்பு

பழனி பகுதியில் படப்பிடிப்பு

கடந்த வியாழக்கிழமை திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருக்கும் நெய்க்காரப்பட்டி கிராமத்தில் 'சாமி 2' படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. விக்ரம் நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.

காக்கிக் சட்டையில் விக்ரம்

காக்கிக் சட்டையில் விக்ரம்

சூறாவளி காற்றினிடையே யூனிஃபார்மோடு ஜீப்பில் இருந்து இறங்கிவரும் போலீஸ் அதிகாரி விக்ரம், வில்லன் வீட்டில் நுழைந்து அவர்களைத் தாக்கி விட்டு வசனம் பேசும் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

இப்படத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராகவும், ப்ரியன் ஒளிப்பதிவாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இப்படத்தை ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.

English summary
Vikram has completed the shooting of the film 'Dhruva Natchathiram' and 'Sketch'. After that, Vikram has participated in 'Saamy 2' shooting. Vikram's latest photo, which has been completely changed for the cop role, is goes viral on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X