»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

"சொக்கத் தங்கம்" படப்பிடிப்பின் போது நகைச்சுவை நடிகர் செந்தில் மயங்கி விழுந்தார். அவர் உடனடியாககோயம்புத்தூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


கோவை மாவட்டம் ஆழியாறு பகுதியில் "சொக்கத் தங்கம்" படப்பிடிப்புக்காக சென்றிருந்தார் செந்தில்.

ஷூட்டிங்கின்போது அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அப்போது அவருக்கு குளிர் காய்ச்சலும்ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து உடனடியாக அவர் கோயம்புத்தூர் கே.ஜி. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு செந்திலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உயர் ரத்த அழுத்தம் காரணமாக கடுமையான காய்ச்சலும், ரத்தஓட்டம் சரியாக இல்லாததால் மயக்கமும் ஏற்பட்டுள்ளது.

வேறு பயப்படும்படி ஒன்றும் இல்லை. இன்னும் இரண்டு நாட்களில் அவர் சரியாகி விடுவார் என்றுமருத்துவமனையின் தலைவரான டாக்டர் பக்தவச்சலம் தெரிவித்தார்.

Please Wait while comments are loading...