»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

சேலத்தில் ராஜ்ஜியம் பட ஷூட்டிங்கில் போக்குவரத்து ஸ்தம்பித்ததால், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத சென்றமாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

பிரபல நடிகர் விஜயகாந்த் நடிக்கும் ராஜ்ஜியம் சினிமா படப்பிடிப்பு திங்கள்கிழமை (மார்ச் 18, 2002) சேலத்தின்முக்கியப்பகுதியான 5 ரோட்டில் நடந்தது. இதற்காக அதிகாலை சேலம் வந்தார் விஜயகாந்த். அவர் தங்கியிருந்தஹோட்டல் முன் ஏராளமான ரசிகர்கள் கூடினர்.

காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஷூட்டிங்குக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலை 8.45மணிக்கே நடிகர் விஜயகாந்த் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு வந்து விட்டார்.

5 ரோடு ரவுண்டானாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படப்பிடிப்பு இடத்துக்கு வந்த விஜயகாந்தை பார்க்க ரசிகர்கூட்டம் முண்டியடித்தது. இதனால் 5 ரோடு, புது பஸ்ஸ்டாண்டு, அஸ்தம்பட்டி, குரங்கு சாவடி, ஸ்டேட் பாங்க்காலனி, மெய்யனூர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.அவர்களால் குறித்த நேரத்திற்கு தேர்வு மையங்களுக்கு செல்ல முடியவில்லை. தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள்10 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரை தாமதமாக தேர்வு மையங்களுக்கு சென்றனர்.

மேலும் படப்பிடிப்பு நடந்த பகுதியில் சொற்ப அளவிலேயே போலீசார் இருந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை. இதனால் போலீசார் திடீரென்று நடத்திய தடியடியில் பல ரசிகர்கள் காயம் அடைந்தனர்.

தேர்வு எழுத சென்ற மாணவர்கள் படப்பிடிப்பால் பாதிக்கப்பட்டது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர்கார்மேகம் மற்றும் கலெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு உடனடியாக புகார் கொடுக்கப்பட்டது.

இதனால் மாணவர்கள் எவ்வளவு நேரம் தாமதமாக வந்தனரோ அவ்வளவு நேரத்திற்கு கூடுதலாக தேர்வு எழுதஅனுமதிக்கப்பட்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil