»   »  ஸ்னேகா ஆச்சி!

ஸ்னேகா ஆச்சி!

Subscribe to Oneindia Tamil

பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்னேகா கிட்டத்தட்ட செட்டி நாட்டு ஆச்சி போலவே மாறி விட்டாராம்.

பார்த்திபன் கனவு படத்தைக் கொடுத்த கரு. பழனியப்பன் இயக்கி வரும் படம்தான் பிரிவோம் சந்திப்போம். நாயகன் சேரன். வித்தியாசமான கதையை மட்டுமே கொடுப்பது என்று வம்படியாக இருக்கும் ஒரு சில நல்ல பட இயக்குநர்களில் கரு. பழனியப்பனுக்கும் ஒரு இடம் உண்டு.

அந்த வகையில் பார்த்திபன் கனவை விட சிறந்த படமாக பிரிவோம் சந்திப்போம் படத்தை இயக்கி வருகிறார் பழனியப்பன். இதில் முதலில் நாயகியாக நடிப்பதாக இருந்தவர் கமலினி முகர்ஜி. ஆனால் தனது கதைக்கு அவர் சற்றும் சம்பந்தம் இல்லாமல் அந்நியப்பட்டு நிற்பதைப் பார்த்து விட்டு அவரை மாற்றி விட்டு ஸ்னேகாவை போட்டு விட்டார் பழனியப்பன்.

சேரனும், ஸ்னேகாவும், ஏற்கனவே ஆட்டோகிராப்பில் இணைந்து திறமை காட்டியவர்கள் என்பதால் அவர்களுக்கிடையே கெமிஸ்ட்ரி சிறப்பாக வந்து விட்டதால், கரு. பரம சந்தோஷமாகி விட்டாராம்.

சூட்டோடு சூடாக படத்தை வேகமாக நகர்த்திக் கொண்டு வருகிறார் பழனியப்பன். இப்படத்தில் செட்டிநாட்டுப் பெண் கேரக்டரில் நடிக்கிறாராம் ஸ்னேகா. இப்படத்தில் நடிப்பதற்காக செட்டி நாட்டுப் பழக்க வழக்கம், பேச்சு வழக்கம், உடை, ஆடை, அணிகலன் என சகலத்தையும் பழனியப்பனே விளக்கமாக ஸ்னேகாவுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்.

இதனால் தனது கேரக்டரோடு ஒன்றிப் போய் விட்டாராம் ஸ்னேகா, அதாவது ஆச்சியாகவே மாறி விட்டார். இப்போது எங்கு போனாலும் செட்டி நாட்டு பாஷையில்தான் பேசுகிறாராம். கேட்டால், எனக்குள் அந்த பாஷை ஊறிப் போய் விட்டது. படம் முடிந்த பிறகுதான் அதிலிருந்து மீள முடியும் போல என்று கூறி சிரிக்கிறாராம்.

எனக்குப் பார்த்திபன் கனவுக்குப் பிறகு பெரிய பெயரைக் கொடுக்கப் போகும் படம் என்று தெரிந்தவர்கள், அறிந்தவர்களிடம் சொல்லிச் சொல்லி மகிழ்கிறாராம் ஸ்னேகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil