»   »  போஜ்பூரியில் சுஜா!!

போஜ்பூரியில் சுஜா!!

Subscribe to Oneindia Tamil

குத்து நாயகியாக வலுவேறி வரும் சுஜா, சமீபத்தில் போஜ்புரி படம் ஒன்றில் தலை காட்டி கலகலப்பான ஒரு ஆட்டத்தைப் போட்டுள்ளாராம்.

நாயகியாக, குத்தாட்ட குமரியாக பலமுகம் காட்டி சிலாகிக்க வைப்பவர் சுஜா. ஹீரோயின் வாய்ப்புகளை விட குத்தாட்ட வாய்ப்புகளே வரிசை கட்டி பாய்ந்து வருவதால் அந்த டிராக்கிலேயே படு வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார் சுஜா.

தமிழில் கலக்கிக் கொண்டிருக்கும் சுஜாவுக்கு சமீபத்தில் போஜ்புரி வட்டாரத்திலிருந்து ஒரு தாக்கல் வந்து சேர்ந்ததாம். இங்கும் உங்களது கலைத் திறமையைக் காட்ட வேண்டும் என்று வந்த அன்புக் கட்டளையை ஏற்று சமீபத்தில் போஜ்புரி படம் ஒன்றில் கும்மாட்டம் போட்டு விட்டுத் திரும்பியுள்ளாராம் சுஜா.

சமீப காலமாக, தமிழ் சினிமா நடிகைகள் பலருக்கும் புகலிடம் கொடுத்து பெருமை சேர்த்துக் கொள்கிறது போஜ்புரி. முதலில் நக்மா போனார். அங்கு அவர்தான் நம்பர் ஒன் நாயகியாம். பிறகு ரம்பா போனார். குஷ்பு கூட போனதாக கேள்வி.

இந்த நிலையில் குத்துப் பாட்டுக்கும் கோலிவுட்டிலிருந்து ரெக்ரூட் செய்ய ஆரம்பித்துள்ளனர் போஜ்புரி திரைவாலாக்கள். சுஜாவின் டான்ஸ் அவர்களுக்குப் பிடித்துப் போய் விட்டதால் அடிக்கடி அழைப்பதாக அன்பாக கூறி அனுப்பி வைத்துள்ளார்களாம்.

ஆடுவது குத்தாட்டம் என்றாலும் சுஜாவுக்கு ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு உண்டாம். குறிப்பாக பிள்ளையார் என்றால் உயிராம். கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலுக்கு அடிக்கடி போவாராம். பிள்ளையார் முன்பு சீட்டுக் குலுக்கிப் போட்டு எடுத்து கடவுள் ஓ.கே. சொன்னால்தான் அந்தக் காரியத்தில் ஈடுபடுவாராம்.

அப்ப போஜ்புரிக்குப் போகச் சொன்னது பிள்ளையார்தானா?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil