»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொடர்ந்து 2 படங்களில் கையில் துப்பாக்கியுடன் ஓடியாடி டயர்ட் ஆகிவிட்ட விஜயகாந்த் மீண்டும் கிராமத்துக் கெட்டப்புக்கு திரும்புகிறார். படத்தின் பெயர்தவசி. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக செளந்தர்யா நடிக்கிறார்.

முதலில் இந்தப் படத்தில் நடிக்க செளந்தர்யா சம்மதிக்கவில்லையாம். தெலுங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் அங்கு அவர் 50 லட்சம் வரை சம்பளம்வாங்குவதாக கூறுகிறார்கள். அதே அளவு சம்பளத்தை தவசிக்கும் கேட்டதால் தயாரிப்பாளர்கள் சைடில் யோசித்துள்ளனர்.

இதையடுத்து அவர் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டாராம். இதையடுத்து விஜயகாந்த் தலையிட்டு சம்பளத்தை கொஞ்சம் குறைத்து செளந்தர்யாவைச்சம்மதிக்க வைத்தாராம்.

ஆனால் செளந்தர்யா நடிக்க யோசித்ததற்கு வேறு ஒரு காரணம் இப்போது சொல்லப்படுகிறது.

விஜயகாந்த் படங்களில் அவருக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் இருக்கும். மேலும் அனல் தெரிக்கும் கண்களோடு கணல் பறக்க அவர் பேசும்நீண்டநெடிய வசனங்கள்.

எதிரே நிற்பவரைத் தாக்குவதற்குக்கூட அவர் எடுக்கும் பல சைடு ஸ்டெப்புகள். சண்டைக்காட்சியின் முன்பும், சண்டை முடிந்த பின்பும் ஏகப்பட்ட அறிவுரைகள்.

நாட்டின் நலன்கருதி ஒவ்வொரு படத்திலும் அவர் வெளிப்படுத்தும் அறிவுரைகள் புத்தகமாக வெளியிடும் அளவுக்கு இருக்கும்.

மேலும் தீவிரவாதிகள் விஷயத்தில் அவர்களை அடக்க அவர் எடுத்துச் செல்லும் ஆயுதங்கள் காண்பவரையும், வில்லன்களையும் வெலவெலக்கவைத்துவிடும்.

தாக்குதலுக்காக சில சமயங்களில் கையில் மஞ்சள் பையுடன் வெட்டரிவாளைக் கூட அவர் எடுத்துச் செல்வதுண்டு. மேற்கண்ட காரிய சித்திகளை செய்துமுடிக்கஅவர் எடுத்துக் கொள்ளும் காலப்பிரமாணம் கணக்கிலடங்காதது.

இதையெல்லாம் தாண்டி ஹீரோயினுக்கு பஞ்சுமிட்டாய் வேஷம் தான் கிடைக்கும். ஹீரோயினை அவரது படத்தில் எதிரிகள், சில நேரங்களில் எதிரிநாட்டினர்,கொன்றுவிடுவதும் உண்டு.

தாயகம், தர்மா, வல்லரசு, வாஞ்சிநாதன், நரசிம்மா என அவரது பல படங்களைப் பார்த்தால் ஹீரோயின் யார் என்பதே நினைவுக்கு வராது. அந்தஅளவுக்கு விஜய்காந்தின் கேரக்டர் பவர்புல்லாக இருக்கும்.

எனவே தவசியிலும் இதே கதிதான் தனக்கு ஏற்படும் என்று செளந்தர்யா யோசித்தாராம். நியாயமான சந்தேகம்தானே என்று சினி வட்டாரங்கள்சொல்கிறது.

இதைக் கேள்விப்பட்ட விஜயகாந்த் உடனே செளந்தர்யாவைத் தொடர்பு கொண்டு தவசியில் ஹீரோயினுக்குத்தான் முக்கியத்துவம்.

தவசியின் மனைவி கேரக்டர் கதையில் முக்கிய அம்சமாக வருகிறது என்றெல்லாம் கூறி சம்மதிக்க வைத்தாராம்.

2 பேருக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறேனுட்டு படம் முழுக்க விஜய்காந்தும், செள்ந்தர்யாவும் மாற்றி மாற்றி டயலாக் பேசி நம்மை பாப்கார்ன்வாங்க கடைக்கு அனுப்பாமல் இருந்தால் சரி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil