»   »  முடிஞ்சு போச்... விஜய் - அட்லீயின் 'தெறி'

முடிஞ்சு போச்... விஜய் - அட்லீயின் 'தெறி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வந்த தெறி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.இதனை படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

'ராஜா ராணி' புகழ் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் தெறி.கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.


Theri Shooting Wrapped Up

தெறி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை தொடங்கி வெளிநாடு மற்றும் இந்தியா என்று மாறிமாறி நடைபெற்றது.படத்தின் கடைசிகட்ட காட்சிகளை லடாக் பகுதிகளில் படம்பிடித்தனர்.


இந்நிலையில் தெறி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் உறுதிப்படுத்தியிருக்கிறார்.ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் "நன்றி ஜீசஸ் தெறி படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்தது" என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இதனை தெறிவித்திருக்கிறார்.


படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து தற்போது டப்பிங் உள்ளிட்ட படத்தின் அடுத்த கட்ட பணிகளில் ஈடுபட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.


Theri Shooting Wrapped Up

இந்தப் படத்தில் விஜய் நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். போக்கிரி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து விஜய் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.


தெறி படத்தின் டீசர் வருகிற குடியரசு தினத்திலும், படம் தமிழ்ப்புத்தாண்டிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


English summary
Vijay's Theri Shooting now Wrapped Up.Cinematographer George C.Williams Wrote on Twitter "Thank you Jesus And it's a wrap #theri".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil