»   »  'பாய்ந்தது' தோட்டா!

'பாய்ந்தது' தோட்டா!

Posted By:
Subscribe to Oneindia Tamil


ஜீவன் நடிக்க உருவாகும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு வெகு தாமதத்திற்குப் பிறகு தொடங்கியுள்ளது.

Click here for more images

ஜீவன் நடிப்பில், செல்வா இயக்கத்தில் நான் அவன் இல்லை படத்திற்குப் பிறகு உருவாகும் படம் தோட்டா. இந்தப் படம் கடந்த 2 ஆண்டுகளாகவே பல்வேறு காரணங்களினால் தாமதமாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் கதை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களில் சில மாற்றங்களைச் செய்து படத்தை 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளனர்.

ஜீவன், ப்ரியா மணியை வைத்து 10 நாள் ஷூட்டிங்கை ஏற்கனவே செல்வா முடித்துள்ளார். இந்த நிலையில் படத்தின் கதையை முழுவதுமாக மாற்றி விட்டாராம் செல்வா. இதனால் முதலிலிருந்தே படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.

இப்படத்தில் முன்பு நடிக்க ஒப்புக் கொண்டபோது ஜீவனுக்கும், ப்ரியா மணிக்கும் குறைந்த சம்பளமே பேசியிருந்தனர். ஆனல் இருவரும் இப்போது ஸ்டார் கலைஞர்களாகி விட்டதால் அதற்கேற்ப சம்பளத்தையும் கூட்டியுள்ளனராம்.

முன்பிருந்த கேமராமேன் யு.கே.செந்தில்குமார் மாற்றப்பட்டு பாலமுருகன் புதிய கேமராமேனாகியுள்ளார். தீர்ப்புகள் திருத்தப்படலாம், தண்டிக்கப்படாத நியாயங்கள் உள்ளிட்ட பல வெற்றிப் படங்ளை இயக்கிய ஆஸ்கர் மூவிஸ் எம்.பாஸ்கர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தோட்டா வேகமாக பாயட்டும்!

Read more about: priyamani thotta

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil