»   »  த்ரிஷாவை படம் புடிக்கும் அம்மா

த்ரிஷாவை படம் புடிக்கும் அம்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னுடைய எந்த சொந்தக் காரியமாக இருந்தாலும் அம்மாவை (அவருடைய அம்மாவைத் தான்) கேட்காமல் நான்முடிவெடுப்பதில்லை என்கிறார் த்ரிஷா.

பெரும்பாலும் நடிகைகள் அனைவருமே அம்மா சொல்லைத் தட்டாத பிள்ளைகளாகத் தான் இருப்பார்கள். இதில் நம்ம த்ரிஷாஒரு படி மேல். அம்மா கிழித்த கோட்டைத் தாண்டவே மாட்டாராம்.

எனக்கு அம்மா தான் எல்லாம். நான் சம்பந்தப்பட்ட எந்தக் காரியமாக இருந்தாலும் நான் அம்மாவைக் கேட்காமல் முடிவெடுக்கமாட்டேன்.

சில விஷயங்களில் மட்டும் நீயே முடிவெடு என்பார். அப்போது மட்டும் நான் களத்தில் இறங்குவேன் என்று கூறும் த்ரிஷாதெலுங்கிலிருந்து நேராக மும்பையில் மையம் கொள்ளப் போகிறாராம்.

பாலிவுட்டில் ஹேமமாலினி, வைஜெயந்தி மாலா, ஸ்ரீதேவிக்குப் பிறகு தமிழ் நடிகைகள் யாருமே அந்த அளவிற்குப் புகழ்பெறவில்லை. அந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைக்கலாம் என்கிறார்கள்.

இதனால் தானோ என்னவோ இப்போதெல்லாம் த்ரிஷா கலந்து கொள்ளும் படப்பிடிப்புகளில் இரண்டு பேரை கேமராவும்,கையுமாக பார்க்கலாம். ஒருவர் படத்தோட கேமராமேனாக இருப்பார். இன்னொருவர் கேமரா வுமன். அதாவது த்ரிஷாவின்அம்மா.

கையில் ஹேண்டிகாமுடன் ஷூட்டிங் தளத்தில் வளைய வரும் த்ரிஷாவின் அம்மா, மகளை போகஸ் செய்து அவரைச் சுற்றியுள்ளநிகழ்வுகளுடன் த்ரிஷாவை படம் பிடித்து வருகிறார். எதற்காம்?

வேறு ஒன்றுமில்லை, த்ரிஷாவை வைத்து ஒரு பிலிம் ஆல்பம் தயாரிக்கப் போகிறாராம் அம்மா. அதனால்தான் படப்பிடிப்புத்தளங்களில் அவரை படமெடுத்துத் தள்ளி வருகிறாராம்.

இந்த ஆல்பத்தை ஏதாவது தமிழ் மற்றும் தெலுங்கு டிவிக்களின் தலையில் பெரிய தொகைக்குக் கட்டிவிடும் திட்டமாம்.த்ரிஷாவின் அம்மா என்பதால் சூட்டிங் ஸ்பாட்டில் சகல இடத்திலும் புகுந்து வெளியே வர முடிகிறது. இதனால் மிக எக்ஸ்க்ளூசிவ்காட்சிகளுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது இந்த த்ரிஷா அம்மா ஆல்பம்.

த்ரிஷா சிரிப்பது, நடிப்பது, நடப்பது, படிப்பது, தூங்குவது என ஒன்று விடாமல் சுட்டுத் தள்ளும் அவரது அம்மா, த்ரிஷாவைசந்திக்க வரும் நபர்களையும் சுட்டுவிடுகிறாராம்.


சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றுக்கு த்ரிஷா ரூ. 90 லட்சம் வாங்கியிருக்கிறார். இது கடந்த மாதம் இருந்த அவரது ரேட்டான ரூ. 80லட்சத்தை விட 10 லகரம் அதிகம். விரைவில் பெரிய நோட்டு ஒன்னை கிராஸ் செய்துவிடுவார் த்ரிஷா என்கிறார்கள்.

தெலுங்கில் இப்படி அள்ளி அள்ளித் தருவதால் இப்போது கோலிவுட் நடிகைகள் அனைவருமே ஆந்திரா பக்கமாக பார்வையைகுத்த வைத்துக் கொண்டுள்ளனர். இந்தப் பட்டியலில் சமீபத்திய வரவு கோபிகா. தமிழில் இதுவரை ரூ. 12 லட்சம் மட்டுமே வாங்கிவந்த கோபிகம் இப்போது அதை ரூ. 18 லட்சமாக உயர்த்திவிட்டார்.

அத்தோடு, எவ்ளோ கவர்ச்சி வேணுமோ எடுத்துக்கோ என்று பிளாட்டாக அனுமதியும் தந்துவிடுகிறார்.

எற்கனவே தெலுங்கில் நடித்திருந்தாலும், அதெல்லாம் அடக்க ஒடுக்கமான ரோல்கள். இப்போது கிளாமர் பூனையாக மாறிவிட்டகோபிகா, தெலுங்கில் ரூ. 25 லட்சம் என்று ரேட்டை தானாகவே பிக்ஸ் பண்ணிக் கொண்டு ஆள் வைத்து ரோல் பிடிக்கும்வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

இங்கேயும் தமிழ் பாணி தான், எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ..தான்

சரி தெலுங்குக்குப் போகும் ஹீரோயின்கள் பத்தியே பேசுறோமே.. ஹீரோ யாருமில்லையா..

இருக்காரே, நம்ம சீயான் இருக்காரே. தெலுங்கில் விக்ரமை இழுத்துப் போட கடும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

தில், தூள் ஆகிய படங்களை இயக்கிய தரணியை அப்படியே தெலுங்குக்கு இழுப்பதோடு விக்ரமையும் அங்கு கொண்டு போகதயாரிப்பாளர்கள் போட்டியிட்டு வருகிறார்கள். மிகுந்த நெருக்கடிக்குப் பின் விக்ரம் தலையாட்டியுள்ள படத்தைத் தயாரிக்கப்போவது ராக்லைன் வெங்கடேஷ்.

அடுத்து கையில் கனத்த பெட்டிகளுடன் இயக்குனர் ஷங்கருக்கும் வலை வீசிக் கொண்டிருக்கிறார்கள் ஆந்திரா ஹீரோக்கள்.இவரை தெலுங்குக்கு வரச் சொல்லி அனத்துவோர் பட்டியலில் சிரஞ்சீவி, நாகர்ஜூனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா ஆகிய 4முக்கிய தலைகளும் உண்டு.

மேட்டரை த்ரிஷாவில் ஆரம்பித்து இப்படி ஷங்கர், சிரஞ்சீவினு வந்து நிற்கிறோமே.. சரி, இத்தோட முடிச்சுக்குவோம்..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil