வெற்றிமாறனின் “விடுதலை’’… படப்பிடிப்புதள புகைப்படம் !

சென்னை : விஜய் சேதுபதி,சூரி நடிக்கும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்புத்தள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

சூரி ஹீரோ

சூரி ஹீரோ

தனுஷின் அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் விடுதலை. இதுநாள் வரை நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி இந்த படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில்

முக்கிய கதாபாத்திரத்தில்

விடுதலை என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தை ஆர்எஸ் இன்பேட்ரைன்மேன்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார்.

கதாநாயகனாக சூரி

கதாநாயகனாக சூரி

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதில், சூரி கான்ஸ்டபில் கெட்டப்பிலும், விஜய்சேதுபதி கைதி கெட்டப்பிலும் இருந்தனர். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பல காட்சிகள் சத்தியமங்கலம் அடர்ந்த காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டபடப்பிடிப்பு செங்கல்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தள போட்டோஸ்

படப்பிடிப்பு தள போட்டோஸ்

இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புதள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் விஜய்சேதுபதி கையில் விலங்குடன் அமர்ந்து இருக்கிறார். மேலும், வெற்றிமாறன் அவருக்கு படப்பிடிப்பு காட்சிகளை விளக்கி கூறுகிறார். இந்த புகைப்படத்தை விஜய்சேதுபதியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

வாடிவாசல்

வாடிவாசல்

சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது இந்த படத்தில் நடிக்க இருக்கும் காளை உடன் சூர்யா பழகி வருவதாகவும் அதுமட்டுமின்றி இந்த படத்திற்கான அனிமேஷன் பணிகளும் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது

Recommended Video

Vetrimaaran Interview on Free Film Course | IIFC |Filmibeat Tamil
அதிகாரம்

அதிகாரம்

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் அதிகாரம் திரைப்படத்திற்கு வெற்றி மாறன் கதை, வசனம் எழுத உள்ளார். இப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டன. இப்படத்தை துரைசெந்தில் இயக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X