twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சீனா புறப்பட்டார் விஜய்!!

    By Shankar
    |

    Vijay
    ஷாங்காய் உலகப் படவிழாவில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு புறப்பட்டார் நடிகர் விஜய்.

    சீனாவின் ஷாங்காய் நகரில் புகழ்பெற்ற உலகப் பட விழா நடக்கிறது. 80 நாடுகளிலிருந்து 2500 படங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்த விழாவில் திரையிட விஜய்யின் காவலன் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம் காவலன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்கர் விருது பெற்ற 'ரெய்ன் மேன்' பட இயக்குநர் பேரி லெவின்சன் தலைமையில் அமைக்கப்பட்ட இயக்குநர்கள் குழுதான் இந்த விழாவுக்குரிய படங்களைத் தேர்வு செய்தது.

    வரும் ஜுன் 11 முதல் 19 வரை விழா நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க விஜய்யை அழைக்கப்பட்டிருந்தார்.

    இதைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்க நேற்று சீனாவுக்குப் புறப்பட்டார் விஜய். இதுகுறித்து அவர் கூறுகையில், "உலகின் பல்வேறு நாட்டு கலைஞர்களும் திரைப்படங்களும் பங்கேற்கும் இந்த விழாவில் நானும் கலந்து கொள்வது பெருமையாக உள்ளது", என்றார்.

    இலங்கை மீது தடை-ஜெவுக்கு விஜய் பாராட்டு:

    இந் நிலையில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் பல்லாயிரணக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து போர்க் குற்றம் புரிந்ததாக ஐநா சபையால் போர்க் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் மற்றும் இலங்கை தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதகம் விளைவித்த இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    உரிமைகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இது ஆறுதலான விஷயம். இனி வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் அமைதியோடும், சந்தோஷத்தோடும் சமமான உரிமைகளோடும் வாழ வேண்டும். அதற்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    English summary
    Actor Vijay left for China yesterday to attend Shangai film festival. His recent release Kavalan has selected to screen in the festival.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X