»   »  'தீ'.. கனடாவில் ஓடிய விஜயகாந்த்!

'தீ'.. கனடாவில் ஓடிய விஜயகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கனடாவில் மனைவியுடன் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் விஜயகாந்த், தீ விபத்து ஏற்பட்டதாக புரளி கிளம்பியதால் மனைவியுடன், ஹோட்டலிலிருந்து வெளியேறி நடு ரோட்டில் 3 மணி நேரம் பரிதவித்தார்.

Click here for more images

விஜயகாந்த் நடிக்கும் 150வது படம் 'அரசாங்கம்'. கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்க, மாதேஷ் இயக்குகிறார். படப்பிடிப்பு கனடாவில் நடந்து வருகிறது. இதற்காக தனது மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் கனடாவில் முகாமிட்டுள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு இரவு விஜயகாந்த்தும், வில்லன்களும் மோதும் பயங்கர சண்டைக் காட்சியை படமாக்கினர். இந்க சண்டைக் காட்சியில் விஜயகாந்த் தவிர, நாயகி நவ்னீத் கெளர், மனோஜ் கே. ஜெயன், ஷெரீன் பிண்டோ கலந்து கொண்டனர். நள்ளிரவு வரை இந்த சண்டை நீடித்தது.

சண்டைக் காட்சியை முடித்து விட்டு விஜயகாந்த், பிரேமலதா, மச்சான் சுதீஷ் ஆகியோர் தாங்கள் தங்கியிருந்த ஹில்டன் ஹோட்டலுக்குக் கிளம்பினர்.

இந் நிலையில் அதிகாலையில், திடீரென ஹோட்டலில் அபாய எச்சரிக்கை மணி ஒலித்தது. ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது. ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர்.

விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷும் தங்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கையில் எடுத்துக் கொண்டு வெளியே ஓடினர்.

தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு, தீ எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்தனர். ஆனால் எங்குமே தீப் பிடிக்கவில்லை என்று தெரிய வந்தது. லிப்ட்டில் இருந்த எச்சரிக்கை மணி தவறுதலாக ஒலித்திருப்பது தெரிய வந்தது.

இந்த பீதியால் விஜயகாந்த் உள்ளிட்ட அனைவரும் ஹோட்டலுக்கு வெளியே கிட்டத்தட்ட 3 மணி நேரம் தவித்தபடி நிற்க வேண்டியதாயிற்று.

இதற்கிடையே படப்பிடிப்பு வருகிற 21ம் தேதி முடிகிறதாம். அடுத்த நாள் விஜயகாந்த் சென்னைக்குக் கிளம்பி வருகிறார்.

Read more about: vijaykanth

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil