»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரமுக்கு தலையில் கண்டம் போல. சேதுவில் மொட்டை அடித்தவர்கள், அவர் தற்போது நடித்து வரும் தில்படத்திலும் தலையில் விளையாடியிருக்கிறார்கள்.

தில் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் வருகிறார் விக்ரம். போலீஸ்காரராக வேண்டும் என்ற கனவுடன்அலைபாய்ந்து கொண்டிருக்கும் கேரக்டர் விக்ரமுக்கு. படத்தின் கதையை விவரித்த டைரக்டர், விக்ரமிடம்,படத்துக்காக வெயிட்டைக் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

டைரக்டர் என்னவோ மேம்போக்காகத்தான் கூறினார். ஆனால் விக்ரம் அதை வேத வாக்காக எடுத்துக் கொண்டார்.குறைத்தார், குறைத்தார், குண்டக்க மண்டக்க உடம்பு வெயிட்டைக் குறைத்து விட்டார்.

வந்து நின்றார் டைரக்டர் முன். அசந்து விட்டார் டைரக்டர். அச்சு, அசலாக ஒரு போலீஸ்காரர் போலஇருந்ததுதான் காரணம். அப்புறம் என்ன, சட்டியை வைத்து தலையை டிரிம் செய்து விட்டார்கள். சுத்தமான ஆயுதப்படை போலீஸ்காரர் போல மாறி விட்டார் விக்ரம்.

விக்ரமை நேரில் பார்த்தால் அசல் போலீஸ்காரர் போலவே இருக்கிறாராம், ஸ்டுடியோவுக்குள் ஒருவித பயம்கலந்த பார்வையுடன் தான் விக்ரமை எல்லோரும் பார்க்கிறார்களாம்!.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil