»   »  அடை மழையிலும் விடாமல் தொடர்ந்த விஷாலின் ஷூட்டிங்!

அடை மழையிலும் விடாமல் தொடர்ந்த விஷாலின் ஷூட்டிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கன மழையையும் பொருட்படுத்தாமல் விஷாலின் இரும்பு​​த்திரை படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது

விஷால் ஒரே நேரத்தில் துப்பறிவாளன் மற்றும் இரும்பு​​த்திரை ஆகிய படங்களில் நடித்து வந்தார். துப்பறிவாளன் சென்ற வருடமும், இரும்புத்திரை இந்த ஆண்டு பொங்கலுக்கும் வெளியாகவேண்டிய திரைப்படங்கள்.

சங்க தேர்தல்கள்

சங்க தேர்தல்கள்

ஆனால் விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க வேலையில் பரபரப்பாக இருந்ததால் சரியான நேரத்தில் இரண்டு படங்களையும் வெளியிட முடியவில்லை. இதனால் விஷாலுக்கு நஷ்டம்தான். ஆனால் அதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் இந்த வருடம் துப்பறிவாளன் வெளியாகி வெற்றி பெற்று அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இரும்புத் திரை

இரும்புத் திரை

இதைத் தொடர்ந்து சண்டகோழி-2வின் முதல் கட்ட படபிடிப்பு நிறைவடைந்து. தற்போது இரும்புத்திரை படத்தின் இறுதிக் கட்டப் படபிடிப்பு அக்டோபர் 29 தேதி ஆரம்பித்து கன மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரிச்சி ஸ்ட்ரீட் மற்றும் மவுண்ட் ரோட் பகுதிகளில் வைத்து நடைபெற்று வருகிறது.

யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா

இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இரும்புத்திரை படத்தில் சமந்தா, ஆக்சன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்துக்கு இசை, யுவன் ஷங்கர் ராஜா.

பொங்கலுக்கு

பொங்கலுக்கு

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் விஷால் இப்படத்தை தயாரிக்கிறார். இரும்புத்திரையைப் பொங்கலுக்கு (2018) வெளியிட வேண்டும் என்பதால் படப்பிடிப்பு இந்த மாத இறுதி வரை தொடர்ந்து இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெற்று வருகிறது .

English summary
Vishal's Irubuthirai shooting is going on fulswing even in heavy rain

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X