»   »  சூட்டிங் ஸ்பாட் விபத்து: விவேக் படுகாயம்

சூட்டிங் ஸ்பாட் விபத்து: விவேக் படுகாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சொல்லி அடிப்பேன் பட சூட்டிங்கில் நடிகர் விவேக் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதியதில் அவர்படுகாயம் அடைந்தார்.

விவேக் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் படம் சொல்லி அடிப்பேன். இந்தப் படத்தின் சூட்டிங் திருச்சிமற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படத்தில் விவேக்குக் ஜோடியாக சாயாசிங் மற்றும்தேஜாஸ்ரீ ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் பாடல் காட்சி ஒன்று திருவானைக்காவல் காவிரி பாலத்தில் படமாக்கப்பட்டது. காட்சிப்படி விவேக்டெல்லி கணேசனுடன் மோட்டார் சைக்கிளில் வந்து பாலத்தின் ஓரத்தில் அவரை இறக்கிவிட்டு, வண்டியைத்திருப்பிக் கொண்டு வேகமாக செல்லவேண்டும்.

ஆனால் டெல்லி கணேசை இறக்கி விட்டு விட்டு, விவேக் வேகமாக வண்டியைத் திருப்பியபோது வண்டி அவரதுகட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலத்தில் மோதியது. இதில் விவேக் தூக்கி வீசப்பட்டார்.

இந்த விபத்தில் காலில் காயமடைந்த விவேக், சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் இப்போது விவேக் குணமடைந்து வருவதாகவும், காலில் வலி குறைந்துவிட்டதாகவும் படக் குழுவினர் தெரிவித்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil