»   »  மீண்டும் 'திரில்லர்' ஜாக்சன்!

மீண்டும் 'திரில்லர்' ஜாக்சன்!

Subscribe to Oneindia Tamil
Michael Jackson
பாப் கிங் மைக்கேல் ஜாக்சன் மீண்டும் ஒரு புது ஆல்பத்துடன் ரசிகர்களை துள்ள வைக்க வருகிறார். இந்த முறை தனது பாப்புலர் ஆல்பமான திரில்லரை ரீமேக் செய்கிறார் ஜாக்சன்.

மைக்கேல் ஜாக்சனின் ஆல்பம் வெளியாகி நீண்ட இடைவெளி ஆகி விட்டது. இதனால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் பழைய ஆல்பங்களை கேட்டு காலத்தை தள்ளி வருகின்றனர்.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு சந்தோஷ செய்தியை அறிவித்துள்ளார் ஜாக்சன். தனது திரில்லர் ஆல்பத்தை ரீமேக் செய்வதாகவும், அதில் பல ஆச்சரியங்கள் ரசிகர்களுக்கு காத்திருப்பதாகவும் அவர் வீடியோ செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கேன்ஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஜாக்சனின் வீடியோ செய்தி வெளியிடப்பட்டது. அதில் பேசிய ஜாக்சன், நான் திரும்ப வருகிறேன். எனது ரசிகர்களுக்காக சில ஆச்சரியங்களையும் உடன் கொண்டு வருகிறேன்.

திரில்லர் ஆல்பத்தை ரீமேக் செய்து கொண்டிருக்கிறேன். அதில் பல சிறப்பு ஆச்சரியங்கள் இடம் பெற்றிருக்கும் என்றார் ஜாக்சன்.

1982ம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் ஆல்பம்தான் திரில்லர். உலகிலேயே அதிக அளவில் விற்பனை ஆன பெரும் சாதனையும் திரில்லருக்கு உண்டு.

உலகெங்கும் உள்ள ஜாக்சன் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த திரில்லரை ஜாக்சன் ரீமேக் செய்வதாக வெளியாகியுள்ள செய்தி அவரது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சி அலைகளை பரவ விட்டுள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil