Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சிரஞ்சீவிக்கு மகள் வாழ்த்து

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷிரீஷ் பரத்வாஜை காதல் மணம் புரிந்து டெல்லிக்குப் பறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஹைதராபாத் திரும்பிய அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதையடுத்து சிரஞ்சீவி குடும்பத்தினர் மனம் இறங்கினர். ஸ்ரீஜாவைப் பார்த்து சிரஞ்சீவியின் குடும்பத்தினர் மனம் நெகிழ்ந்தனர். அவரது குழந்தையையும் கொஞ்சி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் தனது தந்தை ஆரம்பித்துள்ள கட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஸ்ரீஜா.
எனது தந்தை சிறந்த அரசியல்வாதியாக விளங்குவார். மக்களுக்காக சிறப்பாக உழைப்பார். நான் அவரது அதிர்ஷட தேவதை. நான் கேட்டதையெல்லாம் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒன்றை மட்டும் கொடுக்காமல் போய் விட்டார் (கணவர்?). அது மட்டுமே எனக்கு அவரிடம் உள்ள வருத்தம்.
நான் பிறந்த பின்னர்தான் அவருக்கு படங்களில் நல்ல நல்ல ரோல்கள் கிடைத்தனவாம். அவருடைய சில படங்களை நான் பார்த்துள்ளேன். அத்தனை படங்களிலும் நன்றாகவே நடித்துள்ளார்.
தந்தையால் எனக்கு எப்போதும் பெருமைதான். படப்பிடிப்புகளுக்கு நானும் கூடவே செல்வேன். அவரது நடிப்பைப் பார்த்து ரசிப்பேன். படக்குழுவினருடன் நன்றாக பேசுவேன். அந்த நாட்கள் மறக்க முடியாதவை.
எனது தந்தை அரசியலுக்கு வந்தது எனக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்தது. எப்போதுமே தான் அரசியலில் நுழைவேன் என்று அவர் கூறியதே இல்லை. யாரைப் பார்த்தும், யாரைக் கேட்டும் அவர் அரசியலில் நுழையவில்லை. அவருடைய சொந்த முடிவு இது.
சிறந்த தலைவராக அவர் விளங்குவார் என்பதில் சந்தேகம் இல்ைல. அவருக்கு நல்ல இதயம் உள்ளது. நல்ல மனிதரும் கூட. இதுதான் அவரை மக்களுக்கு சேவை செய்யத் தூண்டியிருக்கிறது.
அவரிடம் மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவரும் அதை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். தன்னை நம்பியவரை அவர் எப்போதும் கைவிட்டதில்ைல.
எனது
தந்தைக்கு
எல்லா
அதிர்ஷ்டங்களும்
கிடைக்க
வாழ்த்துகிறேன்
என்று
கூறியுள்ளார்
ஸ்ரீஜா.