twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரதீபா பாட்டீலுக்கு ராஷ்டிரபதி பவனில் 'ஸ்லம்டாக்' திரையீடு

    By Staff
    |

    Prathiba with Rahman and others
    குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்காக ஆஸ்கர் விருதுகளைக் குவித்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இந்திப் பதிப்பு நேற்று ராஷ்டிரபதி பவனில் திரையிடப்பட்டது.

    இப்படத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத், அன்சாரி மற்றும் ஸ்லம்டாக் படக் குழுவைச் சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார், ரசூல் பூக்குட்டி உள்ளிட்டோர் பார்த்து ரசித்தனர்.

    ராஷ்டிரபதி பவன் ஆடிட்டோரியத்தில் நேற்று மாலை ஸ்லம்டாக் திரையிடப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் படத்தைப் பார்த்து ரசித்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், குடியரசுத் தலைவருடன் இணைந்து இப்படத்தை பார்க்க நேரிட்டது மிகவும் மகிழ்ச்சிக்குரியது, கவுரமாக உணர்கிரேன்.

    இந்த நாட்டுக்காக நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்பதை இந்தப் படம் எனக்கு நினைவூட்டுகிறது. குறிப்பாக நலிவடைந்த சமுதாயத்தினருக்கு நாம் நிறையச் செய்ய வேண்டியுள்ளது.

    இப்படத்தின் திரைக்கதை மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. அழகாக அது உருவாக்கப்பட்டிருந்தது. மேலும், படத்தின் இயக்குநர் டேனி பாயில், இப்படத்தின் இசையை மிகச் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். அவருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.

    பாடலாசிரியர் குல்ஸார் கூறுகையில், குடியரசுத் தலைவருடன் இணைந்து படம் பார்த்தது பெருமையாக உள்ளது. இப்படத்தை நான் பலமுறை பார்த்து விட்டேன்.

    இருந்தாலும் இன்று குடியரசுத் தலைவருடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன் என்றார்.

    மத்திய அமைச்சர்கள் கிருஷ்ண தீரத், குமாரி ஷெல்ஜா, சல்மான் குர்ஷித், சிபிஐ இயக்குநர் அஷ்வினி குமார் மற்றும் பலரும் இந்த சிறப்பு திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X