Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கோவா திரைப்பட விழாவில் வசந்த பாலனின் அங்காடித் தெரு!
பொதுவாக சமூக அக்கறை கொண்ட அல்லது கலை சார்ந்த படங்கள் படைப்பாளிகளின் பாராட்டுக்களைப் பெறும்... வர்த்தக ரீதியில் தோற்றுவிடும். ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான அங்காடித்தெரு கலை ரீதியிலும் சரி, வர்த்தக ரீதியிலும் சரி... பெரும் வெற்றி பெற்றது.
புதுமுகம் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வெளியாகி, திரையரங்குகளில் 126 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. பத்திரிக்கைகள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பட்டவர்களின் பாராட்டையும் பெற்றது. ஐங்கரன் இன்டர் நேஷனலின் நிறுவனம் அதற்கு முன் கமர்ஷியல் படங்கள் சிலவற்றின் தோல்வியால் பட்ட நஷ்டத்தைக்கூட அங்காடித் தெரு சரிகட்டியது.
ஒவ்வொரு வருடமும் கோவாவில் நிகழும் இண்டர்நேஷனல் திரைப்பட விழா இந்திய திரையுலகை பொறுத்தவரை மிக மரியாதையானது, கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு நடந்த 41 வது சர்வதேச திரைப்பட விழாவில் அங்காடித் தெரு திரையிடப்பட்டு பல நாட்டு ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது.
விழாவில் படத்தின் இயக்குநர் வசந்த பாலன் பங்கேற்றார்.