Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 24 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகம்...
- News
"பாக். மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கா? ஆதாரம் காட்டுங்க".. பாஜகவை வம்புக்கிழுத்த திக்விஜய் சிங்
- Automobiles
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
நடிக்க சான்ஸ் கேட்டா..ரொம்ப கேவலமா பேசுனாங்க..அங்காடித் தெரு சிந்து வேதனை!
சென்னை : நடிக்க சான்ஸ் கேட்டா கேவலமா பேசுனாங்க என்று அங்காடித்தெரு சிந்து கண்ணீருடன் கூறியுள்ளார்.
நடிகை சிந்து, நாடோடிகள், தெனாவட்டு, நான் மகான் அல்ல, சபரி கருப்பசாமி குத்தகைதாரர், போக்கிரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.
ஆனால், சிந்துவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் அங்காடித்தெரு தான். இந்த படத்தில், ஒரு சிறிய ரோலில் இவர் நடித்திருந்தாலும்,அந்த கதாபாத்திரமும், அவர் பேசிய வசனமும் சும்மா நச்சுனு இருந்ததால், அன்று முதல் அங்காடித்தெரு சிந்துவானார்.
ரகசிய திருமணம்..இயக்குநரின் கட்டுப்பாட்டில் நடிகை..தெலுங்கு நடிகையால் வந்த குழப்பம்!

பல கஷ்டங்களை அனுபவித்தேன்
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல சிகிச்சைகளை மேற்கொண்ட சிந்து தற்போது உடல்நிலை தேறி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்தேன். பணம் இல்லாததால் என் சொந்தங்களே என்னைவிட்டுபோய் விட்டார்கள். தன்னிடம் 20 ஆயிரம் ரூபாய் இருந்தாலும் அதில் 15 ஆயிரம் ரூபாயை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி இருக்கிறார்.

புலம்பிய சிந்து
14 வயதில் எனக்கு திருமணம் நடந்து 15வயதில் ஒரு பெண்குழந்தையுடன் கணவரைவிட்டு பிரிந்து அப்பா வீட்டில் இருந்தேன். அப்போது முதல் இப்போது வரை கஷ்டத்தை மட்டுமே, நான் அனுபவித்து இருக்கிறேன். இருந்தாலும், கஷ்டப்பட்டு இரவு பகலாக நடிச்சி அந்த காசில் என்னை போன்று கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்து இருக்கிறேன். ஆனால், எனக்கு ஏன் கடவுள் இந்த புற்றுநோயை கொடுத்தார் என்று தெரியவில்லை.

கண்ணீர் சிந்தினேன்
மருத்துவமனையில் பணம் இல்லாமல் அவதிப்பட்டேன், யாராவது உதவி செய்யமாட்டார்களா என எதிர்பார்த்து காத்திருந்தேன். அந்த நேரத்தில் ஷகிலா அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள். அவர்கள் எனக்கு அக்கா என்பதைவிட அவர்களை என் அம்மா என்று தான் சொல்லுவேன். அவர்கள் என்னை பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்ட பிறகு பலர் என் வீடு தேடிவந்து உதவி செய்தார்கள்.

சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறேன்
இப்போதும் சிகிச்சையில் தான் இருக்கிறேன் நான் இன்னும் முழுவதுமாக குணமாகவில்லை, மருத்துவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு மேலும், நான் ஓய்வில் இருக்க முடியாது, வீட்டு வாடகை, சாப்பாட்டுக்கு நான் நடித்துதான் ஆகவேண்டும் என்பதால், உடல்நிலைமையை பொருட்படுத்தாமல் வாய்ப்பை தேடி அலைந்து வருகிறேன்

கேவலமா பேசுனாங்க
ஆனால்,நடிக்க சான்ஸ் கேட்டு செல்லும் இடத்தில் என்னை கேவலமாக பேசுகிறார்கள். தலைமுடி இல்லாமல், ஒரு பக்க மார்பகம் இல்லாமல் எப்படி நடிப்பீர்கள் என்று கேட்டு என்னை மேலும் காயப்படுத்துகிறார்கள். எத்தனையோ படங்களில் குணசித்திர வேடத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். ஆனால், நடிகர் சங்கத்தில் இருந்து எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

விஷால் உதவவில்லை
விஷாலிடம் நேரடியாகவே உதவி கேட்டேன் அவர் நடிகர் சங்கத்தில் பணம் இல்லை என்று சொல்லிவிட்டார். நடிகர் சங்கத்தில் தான் பணம் இல்லை, அவரிடமும் பணம் இல்லையா? சின்னத்திரை சங்கத்தினர் அவர்களால் முடிந்த சிறிய தொகை கொடுத்து உதவினார்கள். என் வயிற்றுப்பிழைப்பிற்காக நான் நடித்துத்தான் ஆக வேண்டும் நடிப்பை தவிர வேறு தொழில் எனக்கு தெரியாது என கூறியிருந்தார்.