twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேரள அழகி பார்வதி ஓமனகுட்டன் 'மிஸ் இந்தியா'வாக தேர்வு

    By Staff
    |

    Femina Miss India 2008 winner Parvathy Omanakuttam (C), first runner up Shreya Dhanwantary (R) and second runner up Kavya Barli
    மும்பை: மும்பையை சேர்ந்த கேரளப் பெண் பார்வதி ஓமனக்குட்டன் 'பாண்டலூன் பெமினா மிஸ் இந்தியா-2008' அழகி பட்டத்தை வென்றார்.

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பார்வதி ஓமனக்குட்டன் மும்பையில் வசித்து வருகிறார். மித்திபாய் கல்லூரியில் ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

    'பாண்டலூன் பெமினா மிஸ் இந்தியா-2008' அழகிப் பட்டத்துக்கான இறுதிப்போட்டி மும்பையில் நடந்தது.

    முன்னாள் இந்திய அழகியும், பாலிவுட் முன்னாள் கவர்ச்சி நடிகையுமான ஜீனத் அமன், டிசைனர்கள் ஜே.ஜே.வல்லையா, ரினா தாகா, நடிகைகள் தபூ, கத்ரீனா கைப் உள்ளிட்டோர் போட்டி நடுவர்களாக இருந்தனர்.

    இதில், மேலைநாட்டு தாக்கத்தினால்தான் இந்தியாவில் விவாகரத்து அதிகரித்துள்ளதா என்ற கேள்விக்கு பார்வதி அளித்த சாமர்த்தியமான பதிலால் அதிக புள்ளிகளைப் பெற்று பட்டத்தை தட்டிச் சென்றார்.

    மும்பையை சேர்ந்த சிம்ரன் கவுர் முண்டி 2வது இடத்தையும் மற்றும் கோவாவை சேர்ந்த ஹர்ஷிதா சக்ஸேனா 3வது இடத்தையும் பெற்றனர்.

    பட்டம் வென்ற பார்வதி படு சந்தோஷமாக இருந்தார். மிஸ் இந்தியா பட்டத்தைப் பெறும் முதல் மலையாளப் பெண் நான்தான் என்று சந்தோஷாக கூறினார்.

    முதலிடம் பிடித்த பார்வதி மிஸ் வேர்ல்ட் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் கலந்து கொள்வார். மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு சிம்ரன் கெளர் கலந்து கொள்வார். மிஸ் எர்த் போட்டியில் ஹர்ஷிதா சக்ஸேனா கலந்து கொள்வார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X