twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆனந்தபுரத்து வீடு திரைப்படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் ஆகிறது !

    |

    சென்னை : இயக்குனர் கே பாலச்சந்திரனிடம் உதவி இயக்குனராக இருந்த இயக்குனர் நாகா முதன்முதலாக இயக்கியத் திரைப்படம் ஆனந்தபுரத்து வீடு.

    திகில் நிறைந்த பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்களை தொடர்ந்து இயக்கி வந்த இயக்குனர் நாகா ரமணி Vs ரமணி உள்ளிட்ட காமெடி தொடர்களையும் இயக்கியுள்ளார்.

    பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திகில் நிறைந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது.

    நான் முதல்வரானால் முதலில் இவங்களைதான் காலி பண்ணுவேன்.. மிரட்டும் பிக்பாஸ் பிரபலம்!நான் முதல்வரானால் முதலில் இவங்களைதான் காலி பண்ணுவேன்.. மிரட்டும் பிக்பாஸ் பிரபலம்!

    காலத்தால் அழியாத

    காலத்தால் அழியாத

    இயக்குனர் கே பாலச்சந்தர் தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப் பிரபலமாக பேசப்பட்ட ஒரு இயக்குனர் ஆவார். அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர் கதை, வறுமையின் நிறம் சிகப்பு என காலத்தால் அழியாத பல திரைப்படங்களை இயக்கிய இவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பலரும் தற்போது மிகப் பெரிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

    மர்மதேசம்

    மர்மதேசம்

    அந்த வகையில் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் நாகா, தமிழில் மிகவும் பிரபலமான திகில் தொலைக்காட்சி தொடர்களான மர்மதேசம், சிதம்பர ரகசியம், விடாது கருப்பு போன்ற பல வெற்றித் தொடர்களை இயக்கி மிகவும் பிரபலமானவர். இவர் இயக்கிய அனைத்து தொடர்களும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பல ஆண்டுகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது.

    காமெடி தொடர்களையும்

    காமெடி தொடர்களையும்

    திகில் தொலைக்காட்சி தொடர்களை எடுப்பதில் மிகவும் வல்லவரான இயக்குனர் நாகா, அதேசமயம் காமெடி தொடர்களையும் எடுத்து கலக்கி வந்தார். இவர் இயக்கிய ரமணி vs ரமணி ராம்ஜி, தேவதர்ஷினி மற்றும் சமுத்திரக் கனி போன்றோரின் நடிப்பில் உருவாகி இன்றளவும் பலரையும் ரசிக்க வைத்து வருகிறது. கணவன் மனைவிக்குள் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை காமெடியாக உருவாகியிருந்த இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியடைந்தது.

    முதல் படம்

    முதல் படம்

    இவ்வாறு தொடர்ந்து பல திகில் மற்றும் காமெடி தொடர்களை இயக்கி பிரபலமான இயக்குனர் நாகா முதல் முறையாக இயக்கிய திரைப்படம் ஆனந்தபுரத்து வீடு. திகில் படத்திற்கு உரித்தான அத்தனை அம்சங்களையும் கொண்டு வெளிவந்த இந்தப் படம் 2010ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. நிறைய பேய் மற்றும் ஆவி படங்களுக்கு மத்தியில் ஒரு டீசன்டான படமாக ஆவிகளை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் ஏ, பி, சி என அனைத்து சென்டர்களிலும் மக்கள் ரசிக்கும் வகையில் வந்த முதல் படம் ஆனந்தபுரத்து வீடு ஆகும்.

    எஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள

    எஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள

    முதல்வன், காதல், ஈரம், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என தொடர்ந்து வெற்றிப் படங்களை தயாரித்து அனைவரையும் ரசிக்க வைத்து வந்த இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் நந்தா, சாயாசிங், கிருஷ்ணா போன்ற பலரின் நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

    கூடுதல் பலம்

    கூடுதல் பலம்

    மேலும் இந்த படத்தை விசாரணை, ஆடுகளம், காக்கா முட்டை, ஈரம், பரதேசி போன்ற பிரபலமான வெற்றி படங்களுக்கு படத்தொகுப்பு செய்த மறைந்த படத்தொகுப்பாளர் டி.கிஷோர் இந்த படத்திற்கும் படத்தொகுப்பு செய்திருந்தார். மேலும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு அருண்மணி பழனி செய்திருக்க ஆர்ட் டைரக்டராக பவானி சங்கர் பணியாற்றி இந்த படத்திற்கு கூடுதல் பலம் கூட்டி இருந்தனர்.

    சாயாசிங் கிருஷ்ணா

    சாயாசிங் கிருஷ்ணா

    இந்த படத்தில் நந்தா மற்றும் சாயா சிங்குடன் இணைந்து நடிகர் கிருஷ்ணாவும் நடித்திருந்தார். சாயாசிங் மற்றும் கிருஷ்ணா இவர்கள் இருவருக்கும் இந்த படப்பிடிப்பில் ஏற்பட்ட காதலால் நீண்ட ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவ்வாறு காதலித்து திருமணம் செய்து கொண்ட ரியல் கப்புல்லான சாயா சிங் மற்றும் கிருஷ்ணா சன் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகும் ரன் என்ற தொலைக்காட்சி தொடரில் ரீல் கப்புலாக இருவரும் லீட் ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகின்றனர்.

    ஆனந்தபுரத்து வீடு வெளியான நாள்

    ஆனந்தபுரத்து வீடு வெளியான நாள்

    பல தொலைக்காட்சி நெடுந்தொடர்களை இயக்கி வந்த இயக்குனர் நாகா தன்னுடைய முதல் படத்தை தனது குருநாதர் கே பாலச்சந்தர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 9-ஆம் தேதி அவரின் ஆசிர்வாதத்துடன் வெளியிட்டார். கே.பாலச்சந்தரின் பிறந்தநாள் மற்றும் ஆனந்தபுரத்து வீடு வெளியான நாள் என இரண்டு சிறப்பம்சங்களை கொண்டு வெளியான இந்த படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது.

    English summary
    10 years completed of Ananthapurathu veedu movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X